உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

நற்றிணை தெளிவுரை


பெரிதும் துயருற்று நலிகின்றாள் அவளுக்கு, வாய்மையாளனாகிய தலைவன், சொற்பிழையானாய் வந்துசேர்வாள் என வலியுறுத்திக் கூறுவதன் மூலம், அவளது பெருகும் காமநோயினைத் தீர்த்தற்கு முயல்கின்றாள் தோழி.)

விருந்துஎவன் செய்கோ தோழி! சாரல்
அரும்பற பலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பிமிர் அடுக்கம் புலம்பக் களிறட்டு
உரும்பில் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங்கல் நாடன் வரவறிந்து, விரும்பி, 5
மாக்கடல் முகந்து, மணிநிறத்து அருவித்
தாழ்நீர் நனந்தலை அழுந்துபடப் பாஅய்,
மலைஇமைப் பதுபோல் மின்னி,
சிலைவல் ஏற்றொடு செறிந்தவிம் மழைக்கே?

தோழி! சாரற் பகுதிகளிலே, அரும்புகள் முற்றவும் மலர்ச்சியுற்றவாய் விளங்கும் கரிய அடியையுடைய வேங்கையிடத்தே, வண்டினம் மொய்த்து ஆரவாரித்தபடி இருக்கும். பக்கமலையிடம் அச்சமடையுமாறு களிற்றினைச் கொன்றதாய், அச்சமற்ற உள்ளத்தைக்கொண்ட சிங்கவேறானது திரிந்து கொண்டிருக்கும். அத்தகைய பெரிதான மலைப்பகுதியைச் சார்ந்த நாட்டினன் நம் தலைவன். அவன் வரவினை அறிந்து, அதனை விரும்பி, மேகங்களும் வானத்தே செறிவுற்றன. இருண்ட கடலிடத்து நீரினை முகந்துகொண்டு நீலமணியின் நிறத்தைக் கொண்ட, அருவி நீர் தாழ்கின்ற இயல்பையுடைய அகன்ற இடமெல்லாம் மறைந்துபடுமாறு பரவியதாய், மலை கண்ணிமைப்பதுபோல மின்னலிட்டதாய், ஒலித்தவிலே வன்மைகொண்ட இடியேற்றோடும் செறிவுற்று விளங்கும் இம் மேகங்கட்கு, நாம்தாம் என்ன விருந்தினைச் செய்வேமோ?

கருத்து : 'கார் மேகங்களின் வரவு அவரது வரவினை முற்படவே அறிவிப்பது கண்டேனும் நின் துயரினை ஆற்றியிருப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : கருங்கால் – கரிய அடிப்புறம். அரிமா – சிங்கவேறு. புலம்ப – அச்சமுற்றுத் தனிமைப்பட; இது சிங்க முழக்கிற்கு அஞ்சிய பிற விலங்கினமெல்லாம் வழக்கொழிந்ததனால் உண்டாயது. மணி – நீலமணி. நனந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/221&oldid=1689909" இலிருந்து மீள்விக்கப்பட்டது