உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

நற்றிணை தெளிவுரை


கூறினளாகலாம். 'ஊடலும் உடையமோ?' என்றது. சொற்பிழையானாய் வருவன் என்ற உறுதியினால் ஆற்றியிருந்தமை கூறியது. இதனால், 'ஆற்றியிருந்த அவர்களினுங் காட்டிற் சொற்பிழையானாய் வரைவொடு வந்து மணந்து கொண்ட அவனே பெரியவன்' என்றனளுமாம்.

உள்ளுறை : 'தாழைத் கோட்டின்மீது இறவார் குறுகினம் இறைகொள இருக்கும்' என்றது, அவளுடைய பிரிவுத்துயர் நிரம்பிய உள்ளத்திலே நீயிர் கணப்பொழுதும் பிரியாது வீற்றிருந்திர்' என்பதாம்.

132. இன்றே போலும்!

பாடியவர் : ......
திணை : நெய்தல்,
துறை : காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.

[(து–வி) இற்செறிக்கப்பட்டுக் காவலும் மிகுதியாயிற்று. அதனாலே தலைவனைச் சந்திக்க இயலாமற் போயின தலைவியது ஆற்றாமையும் மிகுதியாகின்றது. அவள் துயரத்தை மாற்றக் கருதிய தோழி, இவ்வாறு அவளுக்குக் கூறுகின்றன.]

பேர்ஊர் துஞ்சும் யாரும் இல்லை
திருந்துவாய்ச் சுறவம் நீர்கான்று ஓய்யெனப்
பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண்வளி
போர்அமை கதவப் புரைதொறும் தூவக்
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல்நகர்ப் 5
பயில்படை நிவந்த பல்பூஞ் சேக்கை
அயலும் மாண்சிறை யதுவே; அதன்தலை
'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும்
யாமம் கொள்பவர் நெடுநா ஒண்மணி
ஒன்றுஎறி பாணியின் இரட்டும் 5
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?

இப் பேரூரின்கண் உள்ளார் யாவருமே துயில்கின்றனர். எமக்கு உசாத்துணை யாவாரும் எவரும் இலர். திருந்திய வாயை உடையதான் சுறாமீனானது நீரைச் கக்குதலால் முழக்கம் எழுகின்றது. 'பெருந்தெருவின்கண் பெயலும் மழைத்துளிகளை உதிர்க்கின்றது. குளிர்ந்த காற்றானது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/257&oldid=1692344" இலிருந்து மீள்விக்கப்பட்டது