உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

275


நிலைப்படுத்தியிருக்கும். இடையனின் வீளையொலியைப் போலவே, தேர் செல்லும் ஒலியும் தன் மனத்தைப் பிற காரியங்களினின்றும் நீக்கித் தலைவிபாற் செலுத்துறலாயிற்று' என்பதுமாம்.

143. காமம் வியத்தற்குரியது!

பாடியவர் : கண்ணகாரன் கொற்றனார்.
திணை : பாலை.
துறை : மனை மருட்சி.

[(து–வி) தன் மகளாய தலைவி, தன் காதலுடனே உடன்போக்கிற் சென்றனள் என்பதை அறிந்ததும், நற்றாயின் மனம் பலவகையாகப் பேதலிக்கிறது. அவளுறவை முன்னரே குறிப்பாக அறிந்தும், அதனை நிறைவு செய்தற்கு அதுகாறும் முயலாத தன் அறியாமைக்கு நொந்து, வீட்டிலிருந்தவாறே இப்படிக் கூறி மருட்சி அடைகின்றாள்]

ஐதேகாமம் யானே ஒய்யெனத்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்
நீர்வார் கண்ணேன் கலுழும்; என்னினும்
கிள்ளையும் 'கிளை' எனக் கூஉம்; இளையோள் 5
வழுவிலள் அம்ம தானே: குழீஇ
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்
இன்னா இன்னுரை கேட்ட சில்நாள்
அறியேன் போல உயிரேன்
'நறிய நாறும்நின் கதுப்பு' என் றேனே. 10

அழகான மாளிகையின் முற்றத்திடத்தே ஏவலாளர் கொணர்ந்த மணல் பரப்பப் பெற்றிருக்கின்றது. அவ்விடத்தே ஓரை விளையாட்டயர்தற்கு வந்து நின்றழைக்கும் அவளது நோழியர் கூட்டத்தினையும் காண்பேன். ஆடிடமாகிய நொச்சிவேலி சூழ்ந்த இடத்தையும் தொடர்ந்து நோக்குவேன். விரைய நீர்வழிகின்ற கண்களை உடையேனாகி அழுதலையும் தொடங்குவேன். என்னினும் காட்டில், அவள் வளர்த்துவந்த கிள்ளையும், அவளைத் தன் உறவெனவே உரிமையுடன் விரைய அழைத்துக் கூவாநிற்கும். இளம் பருவத்தினளாகிய மகள்தான் குற்றம் உடையாளும் அல்லள், அம்பலுரை மிகுந்ததான இந்த மூதூரிடத்துள்ளா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/276&oldid=1693359" இலிருந்து மீள்விக்கப்பட்டது