உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

291


கைப்பற்றினதாகக் கொள்ளலும் பொருந்தும். 'களிறு பல பரப்பி' என்பதும் இதனை வலியுறுத்தும். முரண்கொள் தானை – மாறுபாடு கொள்ளும் தானையும் ஆம்; மாறுபாடாவது பகைவரை அழிகின்ற உறுதிப்பாடு. ஒருமைய நெஞ்சம் – ஒன்று கலந்துவிட்ட நெஞ்சம்.

விளக்கம் : தலைவன் வழுதிக்குத் திறை செலுத்திவாழும் குறுநிலத் தலைவனாதலை, 'மிளை வலி...... பரியலோ இலம்' என்பதனாற் காணலாம். 'தண்டைக் கலிமா கடைஇ வந்து' என்றது, பரத்தையர் சேரியுள் தன்மனம் கவர்வாள் ஒருத்தியைத் தேடியபடி குதிரையை மெல்லச் செலுத்தி வந்தான்' என்பதனால். 'ஒருமைய நெஞ்சம் கொண்டமை விடுமோ' என்றது, தான் பொருளாசையாலன்றி, மெய்யாகவே அவன்பாற் கலந்த நெஞ்சினளாதலைக் கூறி, அதனால் தன் தொடர்பு விட்டுப் போகாத உறுதியுடைத்து என்பதற்காம். 'தாரும் கண்ணியும் காட்டி' என்றது, 'அவள் அவனுக்கே உரியள்' என்பதனைத் தாரணிவித்தும் கண்ணி சூட்டியும் உறுதிப்படுத்தியதை. ஆயின், 'அன்னை வருந்திலள்' என்றது, தான் பிரிவுக்கு வருந்தி வரவை எதிர்நோக்கினும், தன் தாய் அவனை உள்ளே வரவொட்டாளாய்ச் சினத்தோடு வாயிலிடத்தே அவனை எதிர்நோக்கி இருப்பதைக் கூறியதாம். சிறுகோல் பற்றி இருக்கும் யாய் அவன் வரின் அவனை அடித்தலும் கூடும்; நின்னைக் காணின் புடைத்தலும் கூடும்; ஆகவே அவன் வருநல் வேண்டா: நீயும் உடனே இவ்விடத்திலிருந்தும் அகன்றுபோக' என்றும் உரைக்கின்றனள்.

உள்ளுறை : 'களிறு பல பரப்பி, மிளைவலி சிதைத்து, அரண் பல கடந்த வழுதி' என்றது, அவ்வாறே பொருள் பல கொணர்ந்தளித்து அன்னையின் காவலைப் போக்கி, என்னையும் இனி அவர் அடைதற்கு உரியரென நுட்பமாகப் புலப்படுத்தற்காம்.

151. இரவில் வாரற்க!

பாடியவர் : இளநாகளார்.
திணை : குறிஞ்சி,
துறை : இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

[(து–வி.) இரவுர் குறிந்தண் வந்து சிறைப்புறமாக நிற்கின்றான் தலைவன், அவனுக்குத் தாம் வரைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/292&oldid=1693903" இலிருந்து மீள்விக்கப்பட்டது