432
நற்றிணை தெளிவுரை
கொள்ளப்படுகின்றனன். வல்வில் ஓரியென்னும் கொல்லிக் கோமானும் இம் மழவர் குடியினைச் சார்ந்த பெருமகனே என்பதனை இச் செய்யுளால் பாலத்தனார் உரைக்கின்றனர். இவனது கொடையாண்மை பற்றி இவனையும் கடையேழு வள்ளல்களுள் ஒருவனாகக் கொள்வார்கள்.
மாயோன் 32
திருமால்; மலையது கருநிறத்தைக் குறிக்கும் கபிலர் பெருமான், 'மாயோன் அன்ன மால்வரை' என இச்செய்யுளிற் கூறுகின்றனர்.
மூவன் 18
பெருந்தலைச் சாத்தனாராலும் பொய்கையாராலும் பாடப்பெற்றவன்; ஒரு குறுநிலத் தலைவன். இவனைச் சேரமான் கணைக்கால் இரும்பொறையாகிய தொண்டிப் பொருநன் வெற்றிகொண்ட செய்தியை இச்செய்யுளுட் பொய்கையார் உரைக்கின்றனர்.
வழுதி 150
பாண்டியர் குடியினருக்குரிய பொதுப் பெயர். கடுவன் இளமள்ளனார் என்பவர் இச்செய்யுளுள் வழுதி ஒருவனது யானைப்படையின் மிகுந்த படையாண்மைச் சிறப்பினைப் பற்றி உரைக்கின்றனர். பாண்டியன் கானப் பேர் தந்த உக்கிரப் பெருவழுதியை இச் செய்தி குறிப்பதாகவும் கொள்வர்.
வாலியோன் 32
வெண்ணிறத்தோனாகிய பலராமனைக் குறிப்பதாகும். மலையினின்றும் வீழ்கின்ற அருவியின் தோற்றத்தை வியக்கும் கபிலர், 'வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி' என வியந்து போற்றுகின்றனர்.