உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

நமக்கு ஒவ்வாத பழக்க வழக்கம்

நமக்கு ஒவ்வாததும், எவ்வகையிலும் பொறுத்தமற்றதும், நம்மோடு ஒன்றியிருக்க முடியாததுமான சம்பிரதாயங்கள் எப்படியோ நமது சமுதாயத்தில் புகுத்தப்பட்டுவிட்டன. நமக்குத் தேவையற்ற காரியங்களை நீக்கவேண்டுமென்று கருதி, முதலில் திருமண மூறையில் இருந்த தேவையற்ற, பொருளற்ற சடங்குகளை நீக்கிப் புதுமுறையான திருமண முறையைகையாள வேண்டியதாயிற்று. இதனை நம் மக்கள் பெருமளவு கையாள ஆரம்பித்துவிட்டனர். இன்று நாட்டில் பெருமளவிற்கு இம்முறை பரவிவிட்டது. இதை ஆரம்பித்தபோது ஏற்பட்ட இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள் ஆயிரமாயிரம். இன்றைய தினம் தார்போட்ட ரோட்டில் காரோட்டி காரை விரைவாக ஓட்டுவதுபோல், எல்லோரும் இம்முறையினைப் பின்பற்றத் துவங்கிவிட்டனர். இம்மிறையில் செய்யப்படுவதை எல்லோருமே பெருமையாகக் கருத ஆரம்பித்துவிட்டனர். இத்திருமண முறை சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று இருந்தபோதும், லட்சக்கணக்கான திருமணங்களில் வழக்கு மன்றம் போனது என்பது 2,3 தான் இருக்கலாம். அதுபோன்று வைதீகத் திருமணங்களில்கூட பல வழக்குமன்றங்களுக்கு வந்திருக்கின்றன.

சுயமரியாதைத் திருமண செல்லுபடி சட்டமாக்கினோம்

இதனை நாங்கள் சட்டபூர்வமாக்கிய போது, சட்டமன்றத்தில் முன்பு ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு. கேலி பேசிய காங்கிரஸ் நண்பர்களும் இப்போது இதை மிகத்தீவிரமாக ஆதரித்துப் பேசினார்கள்; மிக அவசியம் செய்யவேண்டியது என வலியுறுத்தினார்கள். அதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன்."

[தமிழகச் சட்ட மன்றத்தில் சுயமரியாதைத்
திருமணச் செல்லுபடிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட
பிறகு, முதன் முதலாக விருதுநகரில் 6—12—67
அன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில்
திருமணத்தை நடத்திவைத்து ஆற்றிய உரை]