உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

பெரியாரின் முதல்கவலை நம் சமுதாயத்தைப் பற்றியதே

எனக்கு நன்றாகத் தெரியும் : அவருக்குள்ளகவலை; 'இத்தனை ஆண்டுகள் பாடுபட்டும் இந்தச்சமுதாயம் இன்னும் இப்படியே இருக்கிறதே; இதை எப்படி முன்னுக்குக் கொண்டுவருவது? உலகமக்களோடு சமமாக்குவது?'என்கின்ற கவலை அவருக்கு நிறைய இருக்கிறது. பெரியார் அவர்கள் நினைப்பது போலில்லாவிட்டாலும் ஓரளவுக்காவது இன்று மாறுதல் ஏற்பட்டுத்தான் இருக்கிறது.

வேகமான மாற்றம் தேவை

இன்றைக்குச் சமூகம் நெருமளவுக்குத் திருந்தி இருப்பதை உணருவார்கள். 30,35 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி மன்றங்களில், தாங்கள் சைவர்கள், தாங்கள் வைணவர்கள் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக தங்களின் நெற்றியிலே பூச்சும் நாமமுமாகத் தான் எல்லோரும் வந்திருப்பார்கள். இன்றைக்கு 100க்கு 5 பேர் நெற்றியில்கூட குறிகள் காண்பது அரிது. அதுவும் வியர்வையினால் பாதி மறைந்தும் மறையாமலும் இருக்கிறது. இப்படிச் சமுதாயமானது வைதீகக்கட்டுக் குலைந்துகொண்டிருக்கிறது. பெரியாருக்கிருக்கிற கவலை இன்னும் வேகமாக மாற வேண்டும்; ஒரேயடியாக மாறவேண்டுமென்பதே! இந்தச் சமுதாயம் இன்னும் வேகமாக நடக்கவேண்டும்; முன்னேற்றமடையவேண்டும் என்பதேயாகும்.

முதன்முதல் பெரியார் பேச்சைக் கேட்ட நான்...

பெரியார் அவர்களின் கருத்துக்களை நான் முதன் முதல் 40 வருடங்களுக்கு முன் கேட்க நேர்ந்தபோது, 'என்ன இவர், இப்படிப் பச்சையாகப் பேசுகிறாரே' என்று நினைத்தேன். பின் அவரது கருத்துக்களை சிந்தித்து, அவரோடு தொண்டாற்றத் தொடங்கிய பிறகு