உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 257

இருந்த பணத்தைப் பாழாக்கிக் கொண்டவர்கள்' என்கிற பழிச் சொல்தான் கிடைக்கும் எழுத்தாளர்களுக்கு!

இந்த நிலையிலும் நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள், தமிழ்மொழிக்கு ஏற்றம் தரும் பல அரிய நூல்களை எழுதி யிருக்கிறார்.

மறதி ஆகும் மரபு

நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை.

‘தனித்தமிழ் இயக்கம்' கண்ட மறைமலையடிகள், 'தமிழ்த் தென்றல்"-திரு.வி.க. நீதிக்கட்சித் தலைவர் சர்.பி.தியாகராயர் போன்றவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து, நூல்கள் ஆக்கித் தருவதில் இன்றைய புலவர் பெருமக்கள் ஈடுபட வேண்டும்.

தமிழ் பெரும்புலவர்களின் வாழ்க்கை வரலாறுகள் நம் மிடத்திலே இல்லை. அப்படிப்பட்ட பெரியார்களின் வரலாற்றை மறந்துவிட்டால், நம்முடைய ‘மரபு' பிறகு நமக்குக் கிடைக்காது.

'மரபு' என்பதே இப்போது ‘மறதி' என்று ஆகிவிட்டது.

.

பண்டைத் தமிழ் மன்னர்களைப் பற்றிச் சரியாக எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை.

நம்முடைய பள்ளிச் சிறுவர்களின் பாடநூலைப் பார்த்தால்- இராசராச சோழனுக்கு இராசேந்திர சோழன் மகன் என்று சொல்வாரும் உண்டு; தம்பி என்பாரும் உண்டு' என்று இருக்கும்! ஒரு புத்தகத்தில் கரிகாலனைப் பற்றியத் செய்தி வருகிற இடத்தில் ஒருநட்சத்திரக்குறி இட்டிருப்பார்கள். அதற்கு விளக்கம் கடைசிப் பக்கத்தில் இருக்கும். 'கரிகால் வளவன் உரையூரைத் தலைநகரமாகக் காண்டு ஆண்டான் என்பது உண்மை என்பாரும் உண்டு; இல்லை என்பாரும் உண்டு' என்று இப்படித்தான் அந்த விளக்கம் எழுதப்பட்டிருக்கும்!