உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




302 ||

அப்பாத்துரையம் - 29

மலைத்தோ, கைகால் வேதனைகளைப் பெரிதாகக் கருதியோ பின்னிடைவானானால், அவன் தான் விரும்பியபடி மலையுச்சி அடைய முடியாது. இயற்கையின் இதே நியதி ஆன்மிகத் துறைக்கும் பொருந்தும்.

ஒழுக்க உச்சி, அறிவின் உச்சி அடைய விரும்புபவன் இது போலவே தன் சொந்த முயற்சியுடன் உழன்றே அதைப் பெற முடியும். அதற்கான பாதையை அவனே தேர்ந்தெடுக்க வேண்டும். தானே கடுமுயற்சியுடன் அதில் ஏற வேண்டும். முயற்சியில் தளரவோ, திரும்பவோ செய்தலாகாது. இடர்களை எப்பாடு பட்டும் எம்முறையிலும் தாண்டித் தீர வேண்டும். மருட்சிகள், கடுந்தேர்வுகள், துன்பங்கள் அவன் காலடியில் முட்களாக, பரற்கற்களாக உறுத்தலாம்; குருதி காணும்படி கீறலாம். ஆனால் கற்களாக உறுத்தலாம்; குருதி காணும்படி கீறலாம். ஆனால் இத்தனையும் கடந்து அவன் சென்றால்தான் தான் விரும்பிய இலக்கின் புகழ்சான்ற உச்சி சென்று அதன்மீது கவியும் தெய்வ வானின் மோனப் பெருவெளியைக் கண்டு மகிழ முடியும்.

மற்றும் தொலை நகரத்தைக் குறிக்கொண்டு அதனை அடைய விரும்புபவன் அத்திசையில் பயணம் செல்லாமல் அதை அடைய முடியாது. உடனடியாக அதை அடையும் அமைதி எதுவும் இல்லை. அதற்கான முயற்சியின்றி, அதன் பயனை அடைய முடியாது. நடந்தே சென்றால் அவன் முயற்சி பெரிது, ஆனால் செலவிடும் பணம் சிறிது. ஊர்திகளிலோ, பிற செல் கலங்களிலோ பயணம் செய்வதானால், முயற்சி குறைவது போலத் தோன்றும். ஆனால் அவன் முன்னைய உழைப்பின் பயனான பணம் தந்தே அவ்வாறு தற்போதைய முயற்சி தவிர்க்க முடியும். ஆகவே இயற்கை அமைதியை வென்றுவிடுவதாக மேலீடாகத் தோற்றும் இடங்களில்கூட, நாம் அதை உண்மை யில் வெல்லுவதில்லை. அதன் உருவத்தை, அதன் முறையை, கால ட எல்லைகளை மாற்றுகிறோமேயன்றி, அழிப்பதில்லை.

இயற்கையமைதியின் இதே தன்மை வாய்ந்தது ஆன்மிக அமைதி! தூய்மை, அருளிரக்கம், மெய்யுணர்வு, அமைதி முதலிய எந்தப் பண்பிலக்கை ஒருவன் அடைய விரும்பினாலும், அவற்றை நோக்கிச் செல்லும் வழியில் நடந்து கடந்து சென்றேயாக வேண்டும். இந்த அழகிய ஆன்மிக நகரங்களுக்கு