சாகுந்தல நாடகம்
195
ஆசிரியனுக்கும் மிக்க புகழை விளைத்தல் போலச், சகுந்தலை தனக்கேற்ற துஷியந்த மன்னனை மணந்து கொண்டமையால் தனக்குந் தன்னை மணந்தாற்கும் பெருநலன் றந்து, தன் உடம்பையும் உணர்வையும் வளர்த்த காசியபர்க்கும் மிக்க புகழை விளைத்தா உவமையையும் பொருளையும் பொருத்துக.
‘பிராகிருதம்’ என்பன வடமொழிச் சிதைவாய் அஞ்ஞான் றிருந்த மக்களாற் பேசப்பட்ட பாலி, அர்த்தமாகதி, மகா ராட்டிரம் முதலான மொழிகள்; இவை தமிழ்மொழிக் கலப்பு மிகுதியும் உடை உடையனவென்று மொழிநூல்வல்லார் கூறுவர்.
(பாட்டு) முன்னுக
கொண்டனள்.
-
இதன் பொருள் : தவம் முதிர் முனிவ தவவொழுக்கத்திற் சிறந்த முனிவனே, முன்னுக - நினைந்திடுக, வன்னிமாமரம் தன்னுள்வளர் தி வைத்தல்போல் வன்னியென்னும் பெயருடைய பெரியமரம் தன்னுள்ளே வளரத்தக்க தீயினை வைத்திருத்தல் போல, இந்நிலம் நலம்பெற இந் நிலவுலகத்துள்ள உயிர்கள் வாழ்க்கை நலத்தையடைய, துஷியந்தன் இட்ட பொன் உயிர் - துஷியந்தன் இட்டதாகிய பொலியுள்ள உயிரை, அகட்டினில் பொலியக் கொண்டனள் - தன்வயிற்றினுள்ளே நிறையக் கொண்டாள் என்க.
வன்னிமரத்தின்
கோல்களை ஒருங்கு சேர்த்துக் கடைந்தால், அவற்றிலிருந்து எளிதிலே தீப்பொறி தோன்றக் காண்டலின், அது வன்னிமரம் எனப் பெயர் பெற்றது; வன்னி - நெருப்பு - வன்னி மரத்திலிருந்து எடுக்கப்படுகின்ற தீயானது தூயவேள்வித் தீயினை யுண்டாக்குதற்குப் பயன்படுதல் போலச், சகுந்தலை வயிற்றிலிருந்து பிறக்கும் மகனுந் தூயவேந்தனாய்த் துறவோர் ஆற்றும் வேள்விச் சடங்கும், அதனால் உலகிய லொழுக்கமுந் தூயவாய் நடைபெறுதற்குக் கருவியாவன் என்பது குறிப்பித்தார்.
(பக். 67) ‘கோரோசனை' மாட்டிலிருந்து எடுக்கப்படும் ஒருவகை மருந்து; சில ஏடுகளில் ‘மிருகரோசனை' என்று
ப