உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மொழிப் போராட்டம்

உருது, இந்துஸ்தானி மூன்று மொழிகளும் விவா திக்கப்பட்டன. பொது மொழிப் பிரச்சினை பின் வளர்ந்த விதத்தையும், அதனால் ஏற்பட்ட பலன் களையும் கவனிக்குமுன் மொழிப்பிரச்சினையில் அடி படும் இந்தி, உருது, இந்துஸ்தானி இவைகளிள் வர லாறுகளைச் சிறிது கவனிக்கவேண்டும். கவனித் தால் தான் மொழிப் போராட்டத்தின் போக்கும் விளைவும் நன்றாக விளங்கக்கூடும்.

இந்தி - உருது - இந்துஸ்தானி

வட இந்தியாவின் மொழி வரலாறு பெரும் பாலும் சிதறிய நிலையிலேயே காணப்படுகிறது. முதன்முதலில் சிந்து கங்கைச் சமவெளிகளில் தமிழ் மொழியும், திராவிட நாகரிகமும் செழித்தோங்கி யிருந்தன. சிந்துவெளித் திராவிட நாகரிகம் சிறப் புற்றிருந்த நிலையில்தான் ஆரியர் நடு ஆசியாப் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் வந்து நுழைந் தனர். அவர்கள்

வரும்பொழுது எடுத்துவந்த மொழி 'பிராகிருதம்' என்னும் சிதைந்த நிலையி லுள்ள மொழியாகும். (சிந்துவெளி நாகரிக மக்க ளோடு கலந்ததன் பிறகே தம் மொழிக்கு இலக் கணக் கோப்பு அமைத்து, 'திருத்தப்பட்ட மொழி' என் னும் பொருளைத் தரும் 'சமஸ்கிருதத்தை' உருவாக்கி னார்கள். 'சமஸ்கிருதம்' இந்தியாவில் எக்காலத்திலும் எந்த இடத்திலாவது பேச்சு வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. மதக் கோட்பாடுகளை விளக்குவதாகவும், கடவுள் வழிபாடுகளைக் கொண்டதாகவும், மூதாதையரின் மொழி என்ற அளவிலும் பேச்சு வழக்கில்லாமல்