உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கிலமே பொதுமொழியாதற்குரியது

77

ஆங்கிலமே பொதுமொழியா தற்குரியது 77 படித்தின்புறும் வண்ணம் மொழிபெயர்த்துத் தரும் மொழியும் ஆங்கிலமேயாகும். ஆயிரக்கணக்கான பதிப்புகளையும், இலட்சக்கணக்கான நூல்களையும் வெளியிடும் மொழியும் ஆங்கிலந்தான். இந்தியாவில் ஆங்கிலம் வந்து 150 ஆண்டு களுக்கு மேலாகிவிட்டதால் அந்த மொழியில் ஓரள வுக்கு நல்ல பயிற்சியும் மக்களுக்கு ஏற்பட்டுவிட் டது. மேற்கூறிய தன்மைகள் பொருந்திய ஆங் கிலத்தை இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண் டும் என்று இந்தி ஆதரிப்பாளர்களும், தேசீயத் தலைவர்களும் சென்ற சிலகாலம் வரையில் சொல்லி வந்தார்கள். அப்படிச் சொல்லிவந்ததன் நோக்கம் ஆங்கிலம் இருக்கும் இடத்தை இந்தியால் நிரப்பிவிட வேண்டும் என்பதாகும். ஆனால் இந்தியா விடுதலை யடைந்து; காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சிப்பீடம் ஏறிய பிறகு, உலகில் ஆங்கிலத்தின் உயரிய இடத்தை அறிந்து, அதை விட்டுவிடக் கூடாது. என்றும், அதில் நல்ல பயிற்சி பெறவேண்டும் என் றும் கவர்னர்- -ஜெனரலிலிருந்து கொடி தூக்கும் தேசிய காங்கிரஸ் தொண்டன் வரையில் இன்று கூறி வருகிறார்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மேலெழுந்த வெறுப்பின் காரணமாக ஆங்கிலம் வேண்டாம் என்று கூறுவோர் இரண்டாவது பிரி வினராவர். இந்திக்குச் சலுகை கொடுக்க வேண்டு மென்று எண்ணியவர்-ஆங்கிலம் அறவேகூடாது என்று கூறியவர் இந்த இரு சாராரும் ஆங் கிலம் அந்நியமொழி ஆகவே அது இந்தியாவில் வேரூன்றக்கூடாது என்று வாதிட்டு, அதனை அகற்ற நினைத்தார்கள். ஆனால் ஆட்சிப் பீடம் ஏறிய பிறகு நிலைமையில் தெளிவேற்பட்டதால் அந்த எண்ணத்தை அகற்றிவிட்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தி, ஆங் கிலம் இரண்டும் அந்நிய மொழிகளே யாகும். இந்த