உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவதைகள் பறந்துவிட்டன!

67


நம்பிக்கைகொண்ட ஒரு சில மூடர்களே. இத்தகைய 'அதிசயப் பிராணிகளை'ப் பாசாங்காகப் பார்ப்பார்கள். சான்றுகளைக்கொண்டு ஒரு முடிவுக்கு வராமல், தான் தோன்றித்தனமாக எதையும் முடிவு செய்துகொள்ளும் ஒருசிலர்தான், அவைகள் இருப்பதாக நம்புவர் ஆஞ்செலோ என்ற சிறந்த ஓவிய நிபுணன். மாதா கோயிலை ஓவியங்களால் அழகுபடுத்தும்போது, செருப்பு போட்டுக் கொண்ட தேவதைகளை வரைந்தானாம். அந்தப்படத்தைப் பார்த்த பாதிரியார் ஒருவர், "செருப்புப் போட்டுக்கொண்டிருந்த தேவதைகளைப் பார்த்தவர் யார்?" என்று ஓவியனைப் பார்த்துக் கேட்டாராம். அதற்கு ஆஞ்செலோ தேவதைகளை வெறுங்காலோடு பார்த்தவர்கள் யார்?" என்று மறுமொழியாகக் கேட்டானாம்.

தேவதைகள் வாழ்ந்தன என்பது ஒருபொழுதும் நிலை நாட்டப்படவில்லை. ஆனால் உயர்ந்ததர தேவதைகளையும் தாழ்ந்ததர தேவதைகளையும் கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கொண்டு வருகிறார்கள் என்பதை நாமறிவோம். கேப்ரியல் என்ற தேவதை, மோசஸின் உடலுக்காகப் பூதத்தோடு போரிட்டதையும், டேனியலைக் காப்பாற்றுவதற்காகச் சிங்கங்களின் வாய்களைத் தேவதைகள் அடைந்ததையும், ஏசுகிருஸ்துவிற்குத் தேவதைகள் போதனை புரிந்ததையும், ஏசு உலகத்திற்கு வரும்போது அவருக்குத் துணையாக எண்ணற்ற தேவதைகள் வந்ததையும் கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். மத நூல்களில் உரைக்கப்பட்ட சான்றுகளையும் - உண்மைகளையும் மட்டும் வைத்துக்கொண்டு, குருட்டுத்தனமான போக்கில் பகுத்தறிவற்ற பக்தியன்போடு இவைகளையெல்லாம் அம்மக்கள் நம்பிவருகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்!

ஆனால் இனிமேல் தேவதைகள் எதுவும் வராது! புண்பட்ட நெஞ்சத்திற்குத் தடவ அவைகள் களிம்பு எதனையும்