உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தக் காலமும் இந்தக் காலமும்

73


அதிர்ஷ்ட நகைகள், நாட்கள், எண்கள் ஆகியவைபற்றிக் கவலைப்படுவதில்லை; மந்திரங்களுக்காகவோ அல்லது தாயத்துக்களுக்காகவோ கவலைகொள்வதில்லை; வால் நட்சத்திரங்களுக்காகவோ அல்லது கிரகணங்களுக்காகவோ கவலைப்படுவதில்லை, நல்ல ஆவிகளிடத்தோ அல்லது தீய ஆவிகளிடத்தோ நம்பிக்கை கொள்வதில்லை; கடவுள்களிடத்தோ அல்லது பூதங்களிடத்தோ நம்பிக்கை வைப்பதில்லை. பொதுவான அல்லது தனியான நன்மை பயக்கும் என்று அவர்கள் எதன்மீதும் குருட்டு நம்பிக்கைவைப் பதில்லை, நல்லதை மீட்கிறது, காப்பாற்றுகிறது, ஆதரிக்கிறது என்பதற்காகவோ, அல்லது தீயதைக் கொடியதைத் தண்டிக்கிறது என்பதற்காகவோ எந்த ஆற்றலின் மீதும் அவர்கள் குருட்டு நம்பிக்கை கொள்வதில்லை. மனிதசமுதாய வரலாற்றுக் காலம் முழுவதிலும், வழிபாட்டுரைக்குப் பதிலுரை தரப்பட்டது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை இடப்பட்ட பலிகளெல்லாம் வீணாகிவிட்டன என்றும், எரிக்கப்பட்ட நறுமணப்புகைகளெல்லாம் பாழாகிப் போயின என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள். உலகமானது நச்சுப் பூச்சிகளுக்காக படைக்கப்பட்டு அவைகளுக்காகத் தயாராக்கப்பட்டது என்பதை, அவர்கள் எந்த அளவுக்கு நம்புவதில்லையோ, அதே அளவுக்கு அது மனிதர்களுக்காகப் படைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது என்பதையும் நம்புவதில்லை. எஸ்கிமோயர்களுக்குக் கொழுப்பை உணவாக அளிப்தற்காகவே, வேல்ஸ் என்ற ஒருவகை மீனினம் உண்டாக்கப்பட்டது என்பதையோ அல்லது விட்டில் பூச்சிகளைக் கவர்ந்து, அவைகளை அழிக்கவே தீச் சுழல்கள் உண்டாக்கப்பட்டன என்பதையோ, பொருந்தி வருபவை என்று அவர்கள் நினைப்பதேயில்லை. எல்லாப் பக்கங்களிலும் சான்றுக்கான விளக்கங்கள் தென்படுகின்றன; நல்லது நிகழ்வதற்கான காரண விளக்கங்களும் தீயது நிகழ்வதற்காள காரண விளக்கங்களும் தென்படுகின்றன: எல்லாப் பக்கங்களிலும் நன்மையும், கொடுமையும் இருக்கின்றன; சிறிது உழைப்பிற்குப் பிறகே நல்லது காக்-