கடவுள் அருளியதா கவைக்கு உதவாததா!
113
நாம், நாமே ஒரு ஆண்டையை உண்டாக்கிக் கொண்டு, அது அளிக்கும் விலங்குகளை நன்றியோடு பெற்று மாட்டிக்கொள்ள மாட்டோம். நாம் நம்மையே அடிமைகளாக்கிக் கொள்ளமாட்டோம். நாம் தலைவர்களையும் விரும்போம்; சீடர்களையும் விரும்போம். ஒவ்வொருவனும் இலஞ்சத்துக்காளாகாத உறுதிமொழிகளையும், அச்சுறுததல்களுக்குக் கவலைப்படாத தன்மையையும், தனக்கும் தன்னுடைய கொள்கைக்கும் உண்மையாக நடத்திக் கொள்ளும் பண்பையும்கொண்டு விளங்கவேண்டும் என்பதே நமது விருப்பம். கொடுங்கோலன் மண்ணிலேயோ அல்லது விண்ணிலேயோ இருப்பதை நாம்விரும்பவில்லை.
மூடநம்பிக்கை, ஏமாற்றுதல்களையும் வஞ்சித்தல்களையும், கனவுகளையும் காட்சிகளையும், சடங்குகளையும் கொடுமைகளையும், பக்தியையும் பைத்தியக்காரத் தனத்தையும் பிச்சைக்காரர்களையும் போக்கிரிகளையும், குற்றஞ் சுமத்தல்களையும் வழிபாட்டுரைகளையும், மதத் தத்துவத்தையும், சித்ர வதையையும், பரிதாபத்தையும் வறுமையையும், மகான்களையும் அடிமைகளையும், சடங்குகளையும் வேத மந்திரங்களையும், நோயையும் சாக்காட்டையும் நமக்கு அளித்துள்ளது என்பதை நாம் அறிவோம் !
மதிப்பிடத்தக்கப் பொருள்களனைத்தையும், அறிவியல் நமக்கு அளித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அறிவியல் ஒன்றுதான் நாகரிகத்தைக் கற்பிக்கும் கருவியாகும். அது அடிமையை விடுதலைப்படுத்தியுள்ளது ; நிர்வாணமாயிருந்தவர்களுக்கு உடை உடுத்தியுள்ளது; பசித்திருந்தவர்களுக்கு உணவு வழங்கியுள்ளது; வயதை நீடிக்கச் செய்துள்ளது; நமக்கு வீடுகளையும் குளிர் காயும் இடங்களையும் அளித்திருக்கிறது; படங்களையும் புத்தகங்களையும் தந்திருக்கிறது; கப்பல்களையும் நீராவி வண்டிகளையும் தந்திருக்கிறது; நிலவழித் தந்திகளையும் நீர்வழித் தந்திகளையும் கொடுத்திருக்கிறது; எண்ணற்ற உருளைகளை எப்பொழுதும் உருட்டிக்கொண்டிருக்கும் பொறிகளை