உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவர்தான்‌ பெரியார்‌

3

ஈ.வெ. ராமசாமியாரின் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாவும் கள்ளுக்கடை மறியலுக்குச் சென்றார்கள். ஈரோட்டில் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு அம்மையார்கள் முன்வந்தது எண்ணற்ற பெண்களுக்கு எழுச்சி யூட்டிற்று. ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்.

அதிகாரவர்க்கம் இதை எதிர்பார்க்கவில்லை. ஓர் ஊரில் மட்டும் ஆயிரக்கணக்கான பெண்களைக் கைது செய்யக்கூடிய கல் நெஞ்சம் அன்றைய அதிகாரிகளுக்கு இல்லை. எனவே சென்னை யிலுள்ள மேல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்கள்.

முன் அனுமதி பெற்று ஈரோட்டில் போட்டிருந்த தடை ஆணையை எடுத்துவிட்டார்கள். 144 தடை இதற்குமுன் ஆணையை காலம் முடிவதற்குள் எங்கும் எடுத்ததில்லை. அந்தப் புரட்சியைக் கண்டவர் ஈ. வெ. ராமசாமி.

தனி வாழ்க்கையில் சிக்கனக்காரராகிய ஈ. வெ. ராமசாமித் பொதுத் தொண்டைப் பொறுத்தமட்டில் தாராளமான தியாகி. அவருடைய தென்னந்தோப்பில் கள் இறக்கும் உரிமை ஏற்கனவே குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

இழப்பு ஈடு பெற்றுக்கொண்டு குத்தகையைக் கைவிடும்படி ஈ. வெ. ராமசாமி சொன்னார். அதிகாரிகள் நேர்மாறாக வற்புறுத்தினார்கள். எனவே குத்தகைக்காரர் ஈ.வெ.ராமசாமி யின் பேச்சைக் கேட்கவில்லை.

இந்நெருக்கடியை அவர் எப்படிச் சமாளித்தார்? இரவோடு இரவாக அய்நூறு தென்னை மரங்களை வெட்டிச் சாய்க்கச் செய்தார். நாற்பது ஆண்டுகள் பலன் தரக்கூடிய மரங்களை வெட்ட வைத்தார். என்னே அவருடைய தியாகம்!

கதரை உற்பத்தி செய்தல், அணிதல் காந்தியத் திட்டங்களில் ஒன்று. இதிலும் அவர் மெய்மறந்து ஈடுபட்டார். சீமான் வீட்டுப் பிள்ளையாகிய அவர் கதர் அணிந்தார். வீட்டிலுள்ள அனைவரை யும் அணிய வைத்தார். தன் தாயார்—எண்பது வயது மூதாட்டி, சின்னத்தாயம்மாளை அணிய வைத்தார்.

அவரே கதர் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பட்டி தொட்டி தோறும் சென்று விற்பனை செய்தார். அதனால் மக்களிடையே