உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பவழ

அனுபவிப்பதை விட்டு, ஊர்த்தொல்லையை உன்மேல் போட்டுக்கொண்டு அவதிப்படுகிறாயே, இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று அவர் கூறியிருக்கிறார். பைத்தியமய்யா, எனக்கு, பைத்யம்! உல்லாச ஒடம் கொந்தளிக்கும் கடலிலே செல்லக் காண்கிறேன். ஓடத்திலே, பார்வை பழுதான பணந்தேடிகள் கூத்தாடக் காண்கிறேன், குழப்பம், பீதி, ஏற்படத்தானே செய்யும்!" என்று மருதவல்லி கூறக்கேட்ட, சிறைக்கூடத்தின் தலைவன், பரிதாபப்பட்டான் பித்தம் முற்றிக்விட்டது என்று எண்ணிக்கொண்டு. மாளிகைக்கு அழைத்துச் சென்றான் நவகோடி. வெண்ணிலாவின் விழி, மருதத்தை ஓராயிரம் கேள்வி கேட்டது. மருதவல்லியின் சிரிப்பின் பொருள் அவளுக்கு விளங்கவில்லை.

"பெயர், வெண்ணிலாவா! அழகான பெயர். அவருக்கு உன்னிடம் நிரம்ப ஆசையா? இருக்கும், இருக்கும், ஆவலைக் கிளறும் விழிதான் உனக்கு. வெண்ணிலா! நான் அவருக்கு ஏற்றவளாக முடியாமற் போய்விட்டது. உன்னால் அவருக்கு அந்தக் குறை தீரட்டும்" என்று மருதவல்லி சொல்ல, வெண்ணிலாவுக்கு இலேசாகப் பயமே உண்டாயிற்று. மன்னனின் கோபத்தைத் தடுக்கத் தந்திரமாக, மருதவல்லிக்குப் பைத்யம் என்று கூறச்செய்தோம், பார்க்கப் போனால், இவளுக்கு உண்மையாகவே பைத்யம்போல் அல்லவா இருக்கிறது என்று எண்ணித் திகிலடைந்தாள்.

நீண்ட நாட்கள் மருதவல்லியை மாளிகையில் அடைத்து வைக்க முடியவில்லை. வெண்ணிலாவுக்கு வேறோர் பயமும் புகுந்துவிட்டது. மருதவல்லியை மீண்டும் நவகோடி விரும்ப ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். எனவே மருதவல்லியை விரட்டத் திட்டமிட்டாள். இதற்குள் கவிராயர் வந்து சேர்ந்தார், சேதியைக்கேள்விப்பட்டு, தந்தையும் மகளும் மீண்டும் மாளிகையை விட்டுக்கிளம்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/25&oldid=1638694" இலிருந்து மீள்விக்கப்பட்டது