உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஸ்பம்

49

சர் சண்முகத்தின் பேருரையிலே, ஆண்மை ததும்புகிறது; அதனைக் கண்டே நான் களிப்படைகிறேன்.

"நம்மை ஆளும் அயல்நாட்டாரின் வாக்குறுதிகளினாலோ, நல்ல எண்ணத்தினாலோ, நாட்டு விடுதலை கிடைத்துவிடுமா? கிடைத்து விடாது?!"

என்று கூறுகிறார் சர் சண்முகம். சுதந்திரம் சீமையிலே தயாரிக்கப்படும் சரக்கல்ல, சன்மானமாகப்பெற! அது, நாட்டு மக்களின் நாடி முறுக்கினால் விளையக்கூடிய நிலை. அதனை இங்கேயே தான் பயிரிடமுடியும். ஆனால், அந்த வயலிலே, கள்ளி படர்ந்திருக்கிறது. அதனைக் களையா முன்னம், பயிர் இல்லை, பண்பு இல்லை. இதனை சர் சண்முகம் அஞ்சா நெஞ்சுடன் அறைவது கேண்மின்.

"இந்நாட்டிலே, அதிர்ப்தியும் துவேஷமும் அதிகரித்துளது. இது வருந்தத்தக்கது. ஆனால், இதற்குக் காரணம் என்ன? இங்கு ஒரு கூட்டம், தனது நோக்கமும் கலையுமே பிரதானமென்று கூறி, மற்ற மக்கள் மீது அவைகளைத் திணித்தது. அதன் பலனாகவே கேடு பல தோன்றின. தேசீயத்தின் பெயரால் அக்கூட்டம், மற்றவர்களை அடக்கித் தன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் ஸ்திரப்படுத்த முயற்சிக்கிறது."

இந்தப் பொன்பொழியை ஆராய்ந்து பாருங்கள். இந்த உபகண்டத்தின் வரலாறுகளிலே புதைந்து கிடக்கும் உண்மைகளை உணருங்கள். அந்த ஒரு கூட்டத்தின் செருக்கு எவ்வளவு! அது அழித்த அரசுகள் எத்தனை? அதன் வயப்பட்டு அழிந்த வீரர்கள் எவ்வளவு! இறுமாப்புடன், அக்கூட்டம், தனது "தாசராக" மற்றவரை மாற்றிய கொடுமையை எண்ணிப் பாருங்கள். அப்போதுதான் அறிஞர் சண்முகத்தின் அறவுரையின் அழகு புலனாகும். இதோ வெளிப்படையாகவே வீரர் சண்முகம் விளம்புகிறார் கேளுங்கள்.

பூ—232—ப,ப.—4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/50&oldid=1639298" இலிருந்து மீள்விக்கப்பட்டது