உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு ரிஜிஸ்ட்ரார் என்றும், டாக்டர் என்றும், என்ஜினியர் என்றும், புரபசர் என்றும், ஆபீசர் என்றும்,பெயர் சொல்லிக் கொள்ளக்கூடிய நிலை, ஒரு சிலருக்காவது பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் ஏற்பட்டது. பாலைவனம் ஆக்கப்பட்டிருந்த சமூகத்தில் சோலை வனம் அமைக்க அடிப்படை திருத்தப்பட்டது. சமுதா யத்தின் கட்டுக்கோப்பு குலைந்து விடுமோ என்ற அச்சம் ஒழிந்து பெரும்பான்மையினரைப் பிடித்தாட்டி வந்த பீதியும் பீடையும் ஓரளவுக்கு ஒழிக்கப்பட்டு, பெரும் பான்மை வகுப்பினர், தலை நிமிர்ந்து நடக்கவும், தன் மானம் ம் பெறவும், உரிமையுடன் உலவவும் முடிந்தது. பாலைவனமாகிக் கிடந்த பெரும்பான்மை வகுப்பிலே பாரோர் கண்டு வியக்கத்தக்க மேதைகள் தோன்ற லாயினர். எல்லாத் துறையிலும் வெற்றி கிடைத்தது சந்தர்ப்பம் தரப்படாததால், பெரும்பான்மை வகுப்பு தாழ்வுற்றுக் கிடந்ததேயன்றி, அறிவு வளமும் ஆற்ற லும் அறவே அற்றுப்போனது அல்ல, பெரும்பான்மைச் சமூகம் என்ற உண்மை உலகுக்கு அறிவிக்கப்பட்டது உரிமைக் கிளர்ச்சி ஓடைக்கப்பட்ட உவகை அடைந்தனர் ; மாசு மணி என ஒளி விடத் தொடங்கிற்று பெரும்பான்மை வகுப்பு. திறமை என்பதும், அறிவு ஆற்றல் என்பதும், ஏதோ ஒரு வகுப் புக்கு மட்டுமே பரம்பரைச் சொத்து அல்ல என்று தட்டிக் கூற முடிந்தது. பெரும்பான்மையினரால் போக மிராசு பாத்யதை அழிந்து வந்தது - சர்வம் பார்ப் பன மயம் ஜகத்! - என்ற நிலைமை மாறி, கலெக்டர் 26 5

குக


26