உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு கப்பட்டு விட்டன. கடல் கொண்டது செல்லறிக்கப்பட் டது என்று ஒழிக்கப்பட்டு விட்டன தமிழ் நூற்கள் பலவும். ஆரிய வேதம், வெற்றிக் களிப்போடு பவனி வந்தது, இதிகாச புராணங்கள் இடம் பெற்றன. கீதை கொலு வேறிற்று. தமிழ் மொழியும், அதனடியாகப் பிறந்த வாழ்க்கை வழியும், நாட்டைவிட்டு அறவே அழிக்கப் பட்டு, அகற்றப்பட்டு விட்டன. மாயாவாதம் மக்கள் மன்ற மேறிற்று. 'மண்ணாவது திண்ணம் வாழ்வாவது மாயம்' என்ற போலித் தத்துவம் மக்களை மிருக நிலைக்கு இழுத்துச் சென்று விட்டது. மோட்ச நரகம் மக்கள் மூளையில் ஆசையையும் அச்சத் தையும் மூட்டியது. நாடு காடாயிற்று. நாட்டு மக்கள், உயர்ந்த மக்கள் நிலையிலிருந்து மாக்கள் நிலைக்குப் போய் விட்டனர். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உண்மையை மக்கள் மறந்தனர். வாழ்வு கசந்து விட்டது. தன்னம்பிக்கை போய் விட்டது. தெளிவு போய்ப் போதை! ஒளிபோய் இருள்! அழகு போய் அசிங்கம்! அறம் போய் மறம்! வஞ்சகத்துக்கு வரவேற்பு- சதிக்கு மதிப்பு சூழ்ச்சிக்கு மரியாதை நாட்டு மக்களின் நிலை இந்த அள விற்குத் தடுமாறிப் போய் விட்டது. உலக வாழ்வு ஒரு கூட்டத்தின் சொத்தாயிற்று. சுகம், அந்தக் கூட்டத்தின் உடன் தோன்றியதாயிற்று. கல்வி, அக்கும்பலின் பிறப் புரிமையாயிற்று.

36


36