உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: தருதீப் பேச்சு சி. என். அண்ணாதுரை தகுதி என்ற முறையில் பரீட்சை நடந்தால் ஹரீ ஜனப் பிள்ளைகளும் பின்னணி பிராமணரல்லாதவர்களும் நிச்சயமாக வெற்றிபெற மாட்டார்கள். அப்படியானால் பிராமணரல்லாதவர்களும், ஹரிஜனங்களும் தகுதியற்ற வர்களென்று அர்த்தமில்லை. சூழ்நிலையும், சந்தர்ப்ப வசதி களும்தான் இப்போது தகுதிகளாக இருக்கின்றன. தகுதியை மட்டும் யோக்கியதையாக வைத்து பரீட்சை நடந்தால் வசதி பெற்றவர்கள்தான் முன்னேற முடியும். டிப்பி கலெக்டர் பிள்ளைதான் சாதாரண் கிளர்க்காகவாவது வரமுடியுமென்ற நிலை இத்தேசத்தில் இருக்கிறது. நீடித்த வரலாறு. ஏற்கெனவே சமூக ஏணியில் மேல்படியில் உள்ளவர் கள்தான் உயர உயரப் போய்க் கொண்டிருக்கிறார்கள். பின்னணியில் உள்ளவர்கள் என்னதான் முயன்றாலும் போக முடியவில்லை. இந்தியாவின் சரித்திரத்தை நெடு கப் புரட்டிப் பார்த்தால் இந்த அவக்கேடு அனாதிகாலம் தொட்டு இருந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரி யும். முகலாயர் ஆட்சியில் முகலாயர்தான் முன்னேறி னார்கள். பீஷ்வாக்கள் காலத்தில் பீஷ்வாக்கள்தான் முன்னேறினார்கள் என்று சரித்திரம் கூறுகிறது.

67


67