உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு மறுக்க முடியாத உண்மை

இதே மாதிரி தான் இந்த 20-ம் நூற்றாண்டிலும் நடந்து வருகிறது. உதாரணமாக வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் அமுலுக்கு வரும் முன்னால் ஒரு தாலுகா ஆபிஸில் ஒரு அய்யரோ, அய்யங்காரோ, பிள்ளையோ, முதலியாரோ,நாயுடுவோ, அல்லது வேறு யாருமோ பதவியில் இருந்தால் அவர்கள் தத்தம் வகுப்பாருக்குத் தான் பதவிகளை வழங்கி வந்தார்கள். இதில் பிராமணர் பிராமணரல்லாதார் என்ற வித்தியாசமே இல்லை. வேண்டுமானால் ஒரு வகுப்பார் இதில் அதிக தீவிரமாக இருக்கலாம். இன்னொரு ஜாதிக்காரர் சற்று தீவிரம் மட்டுப்பட்டு இருக்கலாம். இந்த ஜாதீயப் பற்று இல்லாமலிருந்தவர்கள் ரொம்ப அரிது. அப்படி அரி தாக இருந்தவர்கள் அநேகமாக மேல் பதவிகளுக்கு வராமலிருந்தார்கள். அப்படியே வந்தாலும் குடத்துக் குள் வைத்த விளக்குபோல் இருந்தனர். அப்பி இருந்தார்கள் ஹிந்துக்களை மட்டும் தனியாகப் பிரித்து அதோடு பிராமணரை சத விகிதம் போட்டுப் பார்த்தால் 3.8 சத விகிதம் ஆகிறது. அதாவது 100 பேரில் 4 பேர் கூட பிராமணர் இல்லை, இந்தக் குறுகிய தொகையினர்தான் 30 ஆண்டுகளுக்கு முன்னால் உயர்நீதி மன்றத்திலிருந்து சகல சர்க்கார் கட்டிடங்களிலும் அப்பியிருந்தார்கள். இதைக்கண்டு மற்ற வகுப்பார் கொதிப்படைந்திருந் தார்கள்.

68

68