அன்னப் பறவைகள்/குயில்
சீன நாட்டிலே சக்கரவர்த்தி ஒருவர் இருந்தார். உலகத்திலேயே மிகவும் அழகான அரண்மனையில் வசித்து வந்தார். அரண்மனை முழுதும் நேர்த்தியான பளிங்கினால் கட்டப் பெற்றது. அதை எந்தப் பக்கத்தைத் தீண்டுவதாயிருந்தாலும், மிகவும் எச்சரிக்கையுடன்தான் செய்யவேண்டும்; இல்லாவிடின் பளிங்கு உடைந்து விடும். நந்தவனத்தில் அபூர்வமான பல பூச்செடிகள் இருந்தன. அவைகளில் மிகவும் அழகுடைய செடிகளில் சிறு வெள்ளிச் சலங்கைகள் கட்டப்பெற்றிருந்தன. காற்று வீசும் பொழுதெல்லாம் அந்தச் சலங்கைகள் ஒலிக்கும். உடனே பக்கத்தில் செல்பவர்கள் செடிகளைத் திரும்பிப் பார்ப்பார்கள். தோட்டம் முழுதுமே அளவற்ற கவனத்துடனும், அழகுணர்ச்சியுடனும் அமைக்கப் பெற்றிருந்தது. வரிசை வரிசையாக வண்ணமலர்ச் செடிகள் இருந்தன. இடையிடையே மரங்களும், அவைகளைச் சார்ந்து வளரும் கொடிகளும் கண்களுக்கு இனிய விருந்தாயிருந்தன. தோட்டத்தின் எல்லை எது என்று தோட்டக்காரனே அறியமுடியாத நிலையில் அது அவ்வளவு பெரியதாயிருந்தது. தோட்டத்தின் வழியாக நடந்து கொண்டே சென்றால் நெடிய மரங்கள் அடர்ந்த வனங்களை அடையலாம். அவைகளுக்கும் அப்பால் ஆழமான கருங்கடலில் கப்பல்கள் ஓடிக்கொண்டிருந்தன. மேலே மரங்களின் கிளைகளும், கீழே கப்பல்களும் பார்க்க அரிய காட்சியாயிருந்தன. அந்த மரங்களினிடையே ஒரு குயில் வசித்து வந்தது. மீனவர்கள் அதன் இசையைக் கேட்பதில் ஈடுபட்டு, தங்கள் வேலைகளைக்கூட மறந்து ஓடங்களில் சாய்ந்திருப்பார்கள். எவ்வளவு இனிமையாகப் பாடுகின்றது!' என்று அவர்கள் வியப்பார்கள். பிறகு இரவிலேயே மீன் பிடிக்க வேண்டியிருந்ததால், அவர்கள் குயிலை மறந்துவிட்டுக் கடலில் வெகுதூரம் செல்வார்கள். மறு நாள் இரவிலும் அதே கீதத்தைக் கேட்டு, அவர்கள், எவ்வளவு இனிமையாகப் பாடுகின்றது!' என்று ஆச்சரியப்படுவார்கள்.
சக்கரவர்த்தியின் தலைநகருக்கு உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பிரயாணிகள் வந்து கொண்டே யிருந்தனர். அவர்கள் எல்லா விஷயங்களையும் ஆர்வத்தோடு பார்த்து மெச்சினார்கள். அவர்களில் கல்வி அறிவு மிகுந்தவர்கள், திரும்பிச்சென்றபின் நாட்டைப் பற்றியும், நகரத்தைப் பற்றியும், அரண்மனைகளைப் பற்றியும், தோட்டம் பற்றியும் பெரிய நூல்கள் எழுதி விவரித்திருந்தார்கள். ஆனால் கருங்கடல் அருகே வனத்தில் வசித்து வந்த கருங் குயிலைப் பற்றிக் குறிப்பிடாதவர் எவருமேயில்லை. அதுவே தாங்கள் கண்டவற்றிலெல்லாம் முதன்மையானது என்று அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.
அந்நூல்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்றன. நாளடைவில் அவைகளில் சில சக்கரவர்த்தியின் கையிலும் வந்து சேர்ந்தன. அவர் தமது தங்க நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தம் நகரைப் பற்றிய விமரிசனங்களைப் படித்துத் தலையை ஆட்டிக்கொண்டு இன்புறுவார். அரண்மனை, தோட்டம், வனங்கள் முதலியவை பற்றிய வர்ணனைகளுக்குப் பின்னால், 'ஆனால் எல்லாவற்றினும் சிறந்தது கருங்குயில்' என்று அவைகளில் குறிக்கப் பெற்றிருந்தது'.
'இது என்ன விசித்திரம்? குயிலாமே, குயில்?' என்று சக்கரவர்த்தி திகைத்தார். இதைப் பற்றி எனக்கே எதுவும் தெரியாது, ஆனால் பார்த்தவர்கள் பரவசப்பட்டு எழுதியிருக்கிறார்கள்! என் இராஜ்யத்தில், எனது சொந்தத் தோட்டத்திலேயா அது இருக் கிறது! இதைக் கண்டு பிடிக்க நான் வெளிநாட்டுப் புத்தகத்தை அல்லவா பார்க்க வேண்டியிருக்கிறது!' என்று அவர் அங்கலாய்த் துக்கொண்டார்.
உடனே அவர் உயர்குடிப் பிறந்த தம் அணுக்க ஊழியரை* அழைத்தார். அந்த ஊழியரே சக்கரவர்த்தியிடம் நெருங்க முடியும். அவர் தமக்குக் கீழ்பட்ட அதிகாரிகள் தம்மிடம் ஏதாவது கேட்டால், 'பியோ!' என்று சொல்லி, விரட்டிவிடுவார்; அதற்கு என்ன பொருள் என்றால், ஒன்றும் கிடையாது. அவர் கீழ்த் தரமானவர் களிடம் பேசத் தயாரில்லை என்று கொள்ளவேண்டும்.
அவரிடம் சக்கரவர்த்தி, இங்கே குயில் என்ற விசித்திரப் பறவை ஒன்று இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. என் இராஜ்யத்திலுள்ள எல்லாப் பொருள்களிலும் அதுவே சிறந்தது என்றும் நூல் வல்லவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதைப்பற்றி இதுவரை என்னிடம் ஏன் சொல்லப்படவில்லை?' என்று வினவினார்.
'அத்தகைய குறிப்பு எதையும் நான் பார்த்ததில்லை. குயில் எதுவும் இதுவரை நமது ராஜசபையில் அறிமுகம் செய்யப்பட்ட தில்லை !' என்று உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர் தெரிவித்தார்.
அது இன்று மாலை இங்கே வரவேண்டும், வந்து எனக்குப் பாடவேண்டும்! என்னிடம் என்ன பொருள் இருக்கிறது என்று உலகம் முழுவதும் தெரிந்திருக்கிறது, ஆனால் எனக்கு மட்டும் அது தெரியவில்லை!' என்றார் சக்கரவர்த்தி.
அதைப்பற்றி முன்பு யாரும் சொல்லியதில்லை. ஆயினும் நான் அதைத் தேடிக் கண்டுபிடிக்கிறேன்!'
ஆனால் குயிலை எங்கே தேடுவது? உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர் மாடிகளுக்கும் தரைக்குமாக ஓடிச் சாடினார். அறைகள், மண்டபங்களை யெல்லாம் துருவித் தேடினார். அவர் எத்தனையோ பேர்களைச் சந்தித்து வினவினார். குயிலைப்பற்றி ஒருவருக்குமே தெரியவில்லை. எனவே உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர் சக்கரவர்த்தியிடம் ஓடிச்சென்று, அது வெறும் கற்பனை யாகத்தான் இருக்கும் என்றும், மாட்சிமை தங்கிய மகிபாலர், நூலில் எழுதியதையெல்லாம் நம்பிவிடக் கூடாது!' என்றும் கூறினார்.
- உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர்--சக்கரவர்த்தியின் அந்தரங்க ஊழியரான கனவான், இது அவருடைய காரணப்பெயராயிருந்து பட்டமும் ஆகிவிட்டது. சக்கரவர்த்தி, நான் அதைப்பற்றிப் படித்த புத்தகம் ஜப்பானிய சக்கரவர்த்தியால் அனுப்பப்பட்டது. ஆதலால் அதில் பொய் இராது. இந்தக் குயிலின் இசையை நான் கேட்டுத்தான் ஆக வேண்டும்; அதுவும் இன்றிரவில்! அதற்கு நமது பாதுகாப்பை அளிப்போம்; அது வராவிட்டால் நமது அவையிலுள்ளவர்கள் அனைவரையும் இன்றிரவு மிதித்து வெளியே தள்ளவேண்டியது தான்!' என்று மீண்டும் கட்டளையிட்டார்.
'தஸிங்-பே!' என்று கத்திக்கொண்டே, உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர் வெளியே ஓடினார். மறுபடி மாடிகள், கூடங்கள் அறைகளுக்குள்ளே ஓடிச் சாடினார். சக்கரவர்த்தியின் அவையைச் சேர்ந்த உறுப்பினர் பலரும், அதிகாரிகள் பலரும் அவர் பின்னால் ஓடினார்கள். குயில், குயில்-உலகமெல்லாம் தெரிந்த, ஆனால் அரசர் அவைக்கு மட்டும் தெரியாத-குயிலைத் தேடிக்கொண்டு எல்லோரும் அலைந்தார்கள்.
கடைசியாகச் சமையல் அறையில் வேலை பார்த்துக் கொண் டிருந்த ஒரு சிறுமி, குயிலா? ஓ, எனக்கு நன்றாகத் தெரியுமே அது நன்றாகப் பாடும். ஒவ்வொரு நாள் மாலையிலும் நான் இங்கிருந்து என் தாயாருக்கு உணவு கொண்டு போகும் பொழுது கடற்கரைப் பக்கமாகப் போவேன். அங்கேதான் என் தாய் இருக்கிறாள். உணவு கொடுத்துவிட்டு வனத்தில் நான் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்வேன். அபபொழுது குயிலின் இசையை நான் கேட்டிருக்கிறேன். அதன் பாட்டினால் என் கண்களில் நீர்வந்துவிடும். என் தாய் என்னை முத்தமிட்டு அணைத்துக் கொள்வது போல் இருக்கும்!' என்று தெரிவித்தாள்.
உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர், அடுக்களைச் சிறுமி! உன் வேலையைக் காயமாக்குகிறோம், சக்கரவர்த்தி உணவருந்தும் பொழுது நீ நின்று பார்க்க அனுமதிக்கிறோம்---நீ உடனே குயில் இருக்குமிடத்தை எங்களுக்குக் காட்டவேண்டும்! இன்றிரவு அது சக்கரவர்த்தி முன்பு ஆஜராக வேண்டும் என்று கட்டளை பிறந்திருக்கிறது' என்று அவளிடம் தெரிவித்தார்.
-
அவர்கள் எல்லோரும் குயில் கூவும் வனத்தை நோக்கிச் சென்றனர். அவர்கள் போகும் பாதையில் ஒரு பசு கனைத்தது. அதைக்கேட்டுச் சில அதிகாரிகள், 'அதோ குயில் கூவுகிறது' என்றனர். 'இல்லை, அது பசுமாடு, நாம் செல்லவேண்டிய இடம் இன்னும் தூரத்திலிருக்கிறது' என்றாள் சிறுமி. பிறகு தவளைகள் கத்தத் தொடங்கின.
அதைக்கேட்டு, இராஜகுரு, எவ்வளவு அருமையான ஒலி தேவாலயங்களில் மணிகள் அடிப்பது போல இருக்கிறதே!' என்று இசையைப் பாராட்டத் தொடங்கினார்.
'இல்லை, இல்லை, இவைகள் தவளைகள்! சீக்கிரத்தில் நாம் குயிலை அடைந்துவிடுவோம்!' என்றாள் சிறுமி.
சிறிது தூரத்தில் குயில் பாடிக்கொண்டிருந்தது.
சிறுமி, ஒரு மரத்தின் கிளையைக் காட்டி, 'அதோ இருப்பது தான் குயில்! சிறிய உடல், கறுப்பு நிறம்! அதுதான் பாடுகிறது! என்று கூறினாள்.
"இது சாதாரணச் சிறு பறவையாகத்தான் தோற்றுகின்றது. இதைத் தேடிப் பெருங்கூட்டமான பிரதானிகளும், அதிகாரிகளும் இங்கே வந்திருக்கிறோம். நம்மையெல்லாம் பார்த்தே அது அஞ்சி நடுங்கியிருக்கும்!' என்று கூறினார் உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர்.
சமைலறைச் சிறுமி குயிலின் முன் சென்று, 'குஞ்சுக் குயிலே, மாட்சிமை மிகுந்த எங்கள் சக்கரவர்த்தி உன் பாட்டைக் கேட்க விரும்புகிறார் என்று வேண்டினாள்.
'ஆகா, மிகுந்த மகிழ்ச்சியோடு வருகிறேன்!' என்றது குயில். அதன் பேச்சு குழலோசையைவிட இனிமையா யிருந்தது.
உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர், இதன் குரல் கிண்கிணி ஒலிபோலவே இருக்கின்றது! இதன் சிறு தொண்டை எப்படித் துடியாய்த் துடிக்கின்றது! இதைப் பற்றி நாம் முன்னால் அறியாமலிருந்தது வியப்புத்தான். இராஜ சபையில் இது வெற்றிமேல் வெற்றியாகப் பெறும் என்பது நிச்சயம்!' என்று கூறினார்.
குயில், சக்கரவர்த்தி அந்தக் கூட்டத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டு, சக்கரவர்த்திக்காக நான் மறுபடி பாடட்டும்மா?' என்று கேட்டது. அருமைக் குயிலே, இன்றிரவு அரண்மனையில் நடைபெறும் ஒரு விழாவிற்கு உன்னை அழைக்கும் பெருமை எனக்குக் கிடைத்திருக்கிறது. அங்கே நீ உன் இனிய இசையால் சக்கரவர்த்திக்கு விருந்தளிக்கலாம்' என்றார் உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர்.
மரங்களினிடையேதான் என் இசை மிகவும் மதுரமாயிருக்கும்!' என்று சொல்லிவிட்டு, சக்கரவர்த்தியே அழைத்திருக்கிறார் என்ற காரணத்தால் குயில் அவர்களுடன் சென்றது.
அரண்மனை அலங்கரிக்கப்பட்டது. விழா மண்டபத்தில் ஆயிரம் பொன் விளக்குகளின் ஒளியால், இரவு பகலானது போலிருந்தது. பல நிறங்களிலுள்ள அழகிய மலர்க் கொத்துகளால், மண்டபம் முழுதும் மணம் கமழ்ந்து கொண்டிருந்ததுடன், சுவர்கள் யாவும் எழில்பெற்று விளங்கின. தரை முழுதும் பளபளப்பாக மின்னியது. ஆட்கள் அங்குமிங்குமாகத் திரிந்து கொண்டிருந்ததால், காற் றடித்து, மலர்களிலுள்ள சிறு வெள்ளி மணிகள் கணகண என்று ஒலித்துக்கொண்டேயிருந்தன.
சக்கரவர்த்தியின் அரியணைக்கு எதிரே குயில் அமர்ந்திருப் பதற்கு ஒரு தங்கக் கம்பி தொங்கவிடப்பட்டிக்ருதது. அரசவை உறுப்பினர் அனைவரும், மற்றும் பெரிய அதிகாரிகளும் திரண்டு வந்திருந்தனர். அடுக்களைச் சிறுமிக்கு 'அடிசில் அதிகாரி' என்று இப்பொழுது பட்டம் சூட்டப்பட்டு, அவளும் வந்து ஒரு கதவடியில் இருந்தாள். எல்லோரும் தத்தம் உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு வந்திருந்தனர். எல்லோருடைய கண்களும் சின்னஞ் சிறு குயிலின் மீதே பதிந்திருந்தன. சக்கரவர்த்தியும் அதனைப் பார்த்துத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
குயில் மிக மிக இனிமையாகப் பாடிற்று. சக்கரவர்த்தியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகிற்று; பெருகி அவர் கன்னங்களின் மீது வழிந்து கொண்டிருந்தன. அளவுக்கு அதிக மான உருக்கத்தோடு குயில் பாடியது, எல்லோருடைய உள்ளங் களையும் உருக்கி விட்டது. சக்கரவர்த்தி தம்முடைய மகிழ்ச்சி மிகுதியில் தமது தங்கப் பாதுகையை அதற்குச் சம்மானமாக அளிக்க முன் வந்தார். ஆனால் குயில் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, 'எனக்கு ஏற்கெனவே பரிசு அளித்து விட்டீர்களே! தங்கள் கண்களிலிருந்து உதிர்ந்த கண்ணீர் முத்துக்கள் போதாவா?' என்று கேட்டது. உடனே அது மேலும் ஒரு மதுர கீதம் இசைத்தது. 15 பெற்றனர். அது வெளியே செல்லுகையில் அவர்கள் குயிலின் கால் களில் நாடாக்களைக் கட்டி, ஆளுக்கு ஒரு நாடாவைப் பிடித்துக் கொண்டு செல்வார்கள். ஆச்சரியமான இந்த அதிசயப் பறவை பற்றியே நகர மக்கள் அனைவரும் பேசிக் கொண்டனர். ஒருவன் 'கு' என்பான்; மற்றெரு வன் யில் என்பான்-இப்படிப் பையன்களும் தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர். புதிதாகப் பிறந்த பதினெரு குழந்தைகளுக்குக் குயில் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆல்ை அந்தக் குழங்கை களில் ஒன்றுக்குக்கூட இசை பாடத் தெரியாது. ஒரு நாள் சக்கரவர்த்திக்குக் கட்டு ஒன்று வந்து சேர்ந்தது. அதன் மேலே குயில் என்று எழுதியிருந்தது. அதைக் கண்டு, அவர், குயிலைப் பற்றி இன்னும் ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று சொன்னர். ஆனல் அது புத்தகமில்லை. ஒரு சிறு பெட்டியில் செயற்கை யாக அமைக்கப்பட்ட குயில் ஒன்று இருந்தது. அது ஒரு கலைஞனு டைய சிருஷ்டி. அது உயிருள்ள குயிலைப் போலவே யிருந்தது. ஆளுல் அதன்மீது வயிரங்களும், மாணிக்கங்களும், நீலக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. அதன் வால் அசையும் பொழுது வெள்ளியும் தங்கமும் மின்னிக் கொண்டிருந்தன. அதன் கழுத்தில் ஒரு சீட்டுத் தொங்கிக்கொண்டிருந்தது. அதில், ஜப்பானியச் சக்கரவர்த்தியின் இங்தக் குயில் சீனச் சக்கரவர்த்தியின் குயிலுடன் ஒப்பிட இயலாது' ான்று எழுதியிருந்தது. ஒவ்வொருவரும் அங்தக் குயிலேப் பார்த்து, ஆகா, என்ன அழகு என்று வியந்தனர். அதைக் கொண்டுவந்து சேர்த்தவருக்கு |7 'இராஜாதி ராஜருக்குக் குயில் கொணர்ந்த தலைவர்' என்ற பட்டமும் அளிக்கப்பட்டது. இரண்டு குயில்களும் சேர்ந்து பாடவேண்டும், ஜோடியாகப் பாடினல் எவ்வளவு நேர்த்தியா யிருக்கும் ' என்று பலர் கருத்துத் தெரிவித்தனர். அவைகள் சேர்ந்து பாடின. ஆனல் கீதங்கள் மாறுபட்டன. உயிருள்ள குயில் தன் பிரியம்போல் ஓர் இசையைப் பாடியது; பொம்மைக் குயில் தன்னுள் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த ஒரே கீதத்தைத்தான் பாட முடிந்தது. இதல்ை ஒன்றும் குற்றமில்லை! பொம்மைக் குயில் தாளம் பிசகாமல் பாடுகிறது' என்று பாராட்டினர் அரண்மனைச் சங்கீத வித்துவான். பிறகு பொம்மைக் குயிலே தனியாகப் பாடிக்கொண்டிருந்தது. உண்மைக் குயிலைப் போலவே அதற்கும் பாராட்டுகள் வந்து குவிந்தன. மேலும் அதன் இரத்தினங்களும், கற்களும், தங்கமும், வெள்ளியும் அதை மேம்படுத்திக் காட்டின. ஒரே இசையை அது முப்பத்துமூன்று தடவை பாடிற்று. ஆயினும் களைப்படையவில்லை. ஜனங்கள், மீண்டும் ஒரு முறை 48 அடியிலிருந்து பாடத் தொடங்கிலுைம், கேட்கத் தயாராயிருந்தனர். ஆளுல் சக்கரவர்த்தி, ஒரு மாறுதலுக்காக உயிருள்ள குயில் ஒரு முறை பாடட்டும்! என்ருர் ஆல்ை அந்தக் குயிலைக் காணவில்லை. அது சாளரத்தின் வழியாக வெளியே பறந்து போய்விட்டது. மீண்டும் தன் வனத்திற்கே போய்விட்டது. இது என்ன அதிசயம்' என்ருர் சக்கரவர்த்தி, அது ஒரு கன்றி கெட்ட பறவை' என்றனர் அமைச்சர்களும், அதிகாரிகளும். ஆயினும் தலைசிறந்த குயில் ஒன்று நம்மிடம் இருக் கிறதே! நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?' என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே செயற்கைக் குயில் மீண்டும் பாடிக் கொண் டிருந்தது. ஒரே இசையை முப்பத்து கான்காவது தடவையாக எல்லோரும் கேட்டு ரசித்தனர். உண்மையான குயிலைப் பார்க்கிலும் அதுவே மேலானது என்று சங்கீத வித்துவான் உறுதி கூறினர். வெளியில் மட்டு மல்லாது, அதன் உள்ளேயும் அழகு செறிந்திருக்கிறது என்பது அவர் கருத்து. பிறகு அவர் இரண்டு குயில்களுக்கும் உரிய வேற்றுமை களையும் விளக்கிச் சொன்னர் : உயிருள்ள குயில் என்ன பாடப் போகிறது என்பது நமக்கு முன்னதாகத் தெரியாது; செயற்கைக் குயிலில் அது இன்னதுதான் பாடும் என்பது முன்கூட்டியே நமக் குத் தெரியும்; உண்மைக் குயிலின் உள்ளே என்ன இருக்கிறது என் பது நமக்குத் தெரியாது; செயற்கைக் குயிலை நாம் கழற்றி உள்ளே யிருக்கும் கருவிகளை யெல்லாம் பார்க்கலாம் ! எல்லோரும் அவர் கூற்றையே ஆதரித்தனர். அடுத்த ஞாயிற்றுக் கிழமை செயற்கைக் குயிலைப் பொதுமக்களுக்குக் காட்டு வதற்குரிய அநுமதியும் சங்கீத வித்துவானுக்கு அளிக்கப்பட்டது. அவ்வாறே அது காட்டப்பெற்றது. அன்றும் அது பாடிற்று. மக்கள் முக்குகளின்மேல் விரல்களை வைத்துக்கொண்டு, தலைகளை ஆட்டி இதுவே அதிசயம்! இதற்கு ஈடில்லை' என்று பாராட்டி ஞர்கள். ஆல்ை உண்மைக் குயிலின் இசையை அடிக்கடி கேட்டி ருந்த ஒரு மீனவன் மட்டும், இதன் இசை நன்றகத்தான் இருக்கிறது, ஆயினும் உண்மைக் குயிலின் இசைக்கும் இதற்கும் ஏதோ வேற் றுமை இருக்கிறது. அது இன்னது என்று சொல்ல எனக்குத் தெரியவில்லை I என்று கூறினன். 49 உண்மையான குயில் சீன ராஜ்யத்திற்குள் வரக்கூடாது என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்குப் பதிலாகச் செயற் கைக் குயிலே அரண்மனையில் செல்லமாக விளங்கி வந்தது. சக்கர வர்த்தியின் பள்ளியறைப் பக்கத்திலேயே அது பட்டு மெத்தைமேல் இருந்து வந்தது. அதற்காகப் பலர் அளித்த விலையுயர்ந்த பொன் அணிகளும், பிற பொருள்களும் அந்த மெத்தையிலேயே பரத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்தக் குயிலுக்குப் பள்ளியறைப் பாடகர் திலகம் என்ற பட்டமும் அளிக்கப்பட்டது. சங்கீத வித்துவான் செயற்கைக் குயிலைப் பற்றி இருபத் தைந்து நீண்ட நூல்களே எழுதினர். சீன மொழியே கஷ்டம், அதி லும் கடினமான சொற்களைப் பொறுக்கித் தொகுத்திருந்தார் வித்துவான். அந்த நூல்கள் பிறருக்குப் புரிவது அரிது. ஆயினும் பலர் அவைகளைப் படித்துப் புரிந்து கொண்டதாக வெளியே சொல் லிக் கொண்டனர். இல்லையெனில் அவர்கள் அறிவிலிகள் என்று கீழே தள்ளி மிதிக்கப் பெற்றிருப்பார்கள். இவ்வாறு ஒர் ஆண்டு கழிந்தது. இயங்திரக் குயில் இன்னது தான் பாடுகிறது என்பது சக்கரவர்த்திக்கும், அவருடைய சபையோ ருக்கும், மற்றும் பலருக்கும் மனப்பாடமாகி விட்டது. இதல்ை அவர்கள் அதை அதிகமாக நேசித்தார்கள்; அது பாடும் பொழுது தாங்களும் அதனுடன் சேர்ந்து பாடினர்கள் - சக்கரவர்த்தியும் பாடினர் | 50 ஆல்ை ஒரு நாள் மாலை சக்கரவர்த்தி கட்டிலில் சாய்ந்து குயிலின் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அது 'விஸ்ஸ்' என்று கூவிற்று; அதனுள் இருந்த சக்கரங்களில் விர்ர் என்று சப்தம் கேட்டது. அத்துடன் இசை கின்று போயிற்று. சக்கரவர்த்தி கட்டிலிலிருந்து துள்ளியெழுந்தார்; தம்முடைய அரண்மனை வைத்தியர்களை அழைத்தனுப்பினர். ஆளுல் அவர் களால் என்ன செய்ய முடியும் ? பிறகு கடிகாரக்காரன் ஒருவன் வந்தான். நெடுநேரம் ஆராய்ந்து, அதனினும் அதிக நேரம் அதைப் பற்றிப் பேசிவிட்டு, அவன் குயிலைப் பழுது பார்த்தான். குயிலின் உறுப்புகள் ஒருவாறு மறுபடி வேலை செய்யத் தொடங்கின. ஆயி ணும் கடிகாரக்காரன், அதிக வேலையால் அதன் உறுப்புகள் தேய்ந்து விட்டன. ஆகையால் அதைக் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்':என்றும், மறுபடி அதைப் பழுது பார்ப்பதானுல் ஒரு வேளை இசை வராமலே போய்விடும் என்றும் சொல்லிப் போனன். இதல்ை செயற்கைக் குயில் ஆண்டுக்கு ஒருமுறை மட் டும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பெற்றது. அரண்மனை வித்து வான் குயில் மறுபடி சரியாகி விட்டது' என்று வெளியில் பேசிக் கொண்டார். அவர் சரி என்றதால், எல்லாம் சரிதான் என்ருகி விட்டது. ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சீன மக்களுக்கு ஒரு துக்ககரமான நிகழ்ச்சி ஏற்பட்டது. அவர்களுக்குப் பிரியமான சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டார்; பிழைப்பது அரிது என்றும் பேச்சு வந்தது. இடையிலேயே புதிய சக்கரவர்த்தி ஒருவரும் தேர்ந் தெடுத்து வைக்கப்பட்டார். ஜனங்கள் தெருக்களில் கூடி உயர் குடிப் பிறந்த அணுக்க ஊழியரிடம் சக்கரவர்த்தியின் உடல்நிலை பற்றி விசாரித்தார்கள். அவர் பியோ!' என்று கத்தி விட்டுப் போய் விட்டார். மகோன்னதமான கட்டிலில் சக்கரவர்த்தி படுத்திருந்தார். முகம் வெளுத்து விட்டது, உடல் குளிர்ந்திருந்தது. அரசவையைச் சேர்ந்தவர்கள் அவர் இறந்தே போய்விட்டார் என்று கருதி, புதிய சக்கரவர்த்தியை வணங்குவதற்காகப் போய்விட்டனர். அரண்மனை முழுதும் அறைகளிலும், நடைபாதைகளிலும் துணிகள் விரிக்கப் பட்டிருந்தன. நடப்பதில் ஒசையில்லாமல் இருப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது. எங்கும் நிசப்தமாயிருந்தது. சக்கர 51 வர்த்தி இன்னும் மரிக்கவில்லை. தங்கமணிகள் கட்டிய வில்வெட்டுத் திரைகளுடன், அவர் பள்ளியறையில் நீட்டி கிமிர்ந்து விறைப்பாகப் படுத்திருந்தார். அறையில் பெரிதான திறந்த சாளரம் ஒன்று இருந்தது. அங்திமயங்கிய பின், அதன் வழியாகத் தண்மதியின் ஒளி உள்ளே பரவியிருந்தது. அவர் பக்கத்தில் செயற்கைக் குயிலும் இருந்தது. சக்கரவர்த்திக்கு மூச்சு விடுவதே கஷ்டமா யிருந்தது. நெஞ் சில் ஏதோ பாரம் அமுக்குவது போலிருந்தது. அவர் கண்களைத் திறந்து, எழில் மிகுந்த தங்கப் பறவையே, பாடு உனக்கு என் தங்கப் பாதுகையைக் கூடப் பரிசளித்தேன்; நவரத்தினங்கள் பரிசளித்தேன்! பாடு, சிறிது கேரம் உன் இசையைக் கேட்க வேண் டும்! என்று வேண்டினர். ஆனல் பறவை மெளனமாக இருந்தது. அதனுள் இருந்த விசையைத் திருக்கி வைப்பார் இல்லாததால், அது அலகைத் திறக்கக் கூட முடியவில்லை. திடீரென்று பக்கத்து ஜன்னலிலிருந்து இசையமுதம் உள்ளே பாய்ந்து வந்தது. வெளியே ஒரு மரக் கிளையில் அமர்ந்துகொண்டு, உண்மையான குயில் பாட்டிசைத்தது. சக்கரவர்த்திக்கு உடல் கல மில்லை என்று கேள்விப்பட்டு அவருக்கு ஆறுதலளிப்பதற்காக அது வந்திருந்தது. அதன் இசையால் சக்கரவர்த்தியின் ாரம்புகள் முறுக் கேறின. அவற்றில் உதிரம் கன்ருகப் பரவி, அவர் உடம்புக்குத் தெம்பு உண்டாகிவிட்டது. ான்றி, நன்றி' என்று மொழிந்தார் சக்கரவர் த்தி. தெய்விகப் பறவையே, உன்னை எனக்குத் தெரியும். உன்னை நான் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டேன். இப்பொழு து நீ வந்து எனக்கு உயிர் தந்தாய் சாவை எதிர்த்து விரட்டிவிட்டாய் உனக்கு கான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? என்று அவர் வியப்போடு வினவினர். 'எனக்குத் தாங்கள் போதிய கைம்மாறு செய்துவிட்டீர்களே! முதல் முதல் கான் தங்கள் முன்பு பாடியபொழுது நீங்கள் உள்ள முருகிக் கண்ணிர் விட்டீர்களே! அதுவே எனக்குரிய வெகுமதி யாகும். பாடகருக்கு அதுதான் வேண்டும்...நான் மேலும் பாடு கிறேன். தயவு செய்து இப்பொழுது நீங்கள் கண்களை மூடிக் கொண்டு உறங்க வேண்டும்' என்றது குயில். 79ן ח 52 அது மறுபடி பாடிற்று. சக்கரவர்த்தி ஆழ்ந்த துயில் கொண் டார். காலக் கதிரோன் உதிக்கும்பொழுது அவர் உடல் கலம் பெற்று எழுந்திருந்தார். அவர் உண்மைக் குயிலைப் பார்த்து, அன்புக் குயிலே! நீ என் னுடேனேயே எப்பொழுதும் இருந்துவர வேண்டும். உனக்கு விருப்ப மான சமயம் பாடினல் போதும். இந்தச் செயற்கைக் குயிலே நான் சுக்கு நூருக உடைத் தெறிகிறேன்! என்ருர். இதற்குக் குயில் கூறியதாவது: அரசர்க்கு அரசே! அப்படிச் செய்ய வேண்டாம். அதனுல் இயன்ற நன்மையை அது தங்களுக்குச் செய்துவிட்டது. அதுவும் தங்களிடமே யிருக்கட்டும். நான் இங்கே இந்த அரண்மனையில் கூடு கட்டிக் குடியிருக்க முடியாது. எனக்குப் பிரியமானபோதெல்லாம் நான் வருகிறேன். வந்து, கிளே யில் அமர்ந்துகொண்டு மாலை நேரத்தில் பாடுகிறேன். என் இசையால் தங்களை மகிழ்விக்கிறேன்; அத்துடன் தங்கள் சிந்தனையும் கிளர்ச்சி யடையச் செய்கிறேன். தங்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட் டிருக்கும் கல்லதையும் தீயதையும் பற்றிப் பாடுகிறேன். ஆளுல் தாங்கள் எனக்கு ஒர் உறுதி அளிக்க வேண்டும்' "எங்த உறுதியும் அளிக்கிறேன்!" என்ருர் சக்கரவர்த்தி. அப் பொழுது அவர் கண்ணைப் பறிக்கும் ஜரிகைப் பட்டு உடைகளுடன் விளங்கினர். ஒரே விஷயம்தான் நான் வேண்டுவது. தங்களிடம் எல்லா விஷயங்களையும் தெரிவிக்கும் சின்னஞ் சிறு பறவை ஒன்று இருப்ப தாக வெளியே சொல்லாமலிருக்கவேண்டும்'