உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

11

திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட பிரதேசம் அடிக்கடி கைம்மாறி வந்தது. இப்பிரதேசத்தைத் ‘திருவடி தேசம்’ என்று சாசனங்கள் குறிப்பதிலிருந்து,இது நீண்ட காலமாகச் சேர அரசர்கள் கைவசமிருந்ததெனக் கருதவேண்டியதாயிருக்கிறது. ஆனால் விஜயநகரப் பிரதிநிதிகளுள் விட்டலராயர் முதலியோரும் நாயக்கர் சேனாதிபதியான ராமப்பய்யன் முதலியோரும் திருவடி தேசத்தின் உட்பகுதிக்கே படையெடுத்துச் சென்று தங்கள் அரசரின் பெருமையை நிலைநாட்டினர். நாயக்கர் படை கொல்லம் 810 முதல் (கி. பி. 1635) நாஞ்சினாட்டை மிகவும் துன்புறுத்தியது என்றும், இது போன்ற காரணங்களால், கொல்லம் 849 முதல் 869 வரை, நிலவரி முதலியன நீக்கப்பட்டன என்றும் முதலியார் ஓலைச் சாசனமொன்று தெரிவிக்கின்றது. கி.பி. 1700-க்குப் பின்தான் நாஞ்சினாட்டில் சிறிதளவு சமாதானம் ஏற்பட்டதென்று சொல்லலாம். ஆனால் உள்நாட்டுக் கலகங்களும் திப்பு சுல்தானது படையெடுப்பால் வந்த விபத்துக்களும் நாஞ்சினாட்டினருக்குப் பெருந்துன்பம் விளைத்தன. இதுவும் நீங்கி, கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் நாடு அமைதி பெற்றிருக்கிறது.

II

மேலே விவரித்த சரித்திரத்தால் நாஞ்சினாட்டினரின் நிலை மிகவும் வருந்தத் தக்கதாயிருந்தமை எளிதின் அறியத்தகும். அவர்களிற் பல குடும்பத்தினர் பல நூற்றாண்டுகட்கு முன்னே அங்கே குடியேறியவர்கள்; ஒரு சில குடும்பத்தினர் சோழர்