உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

15

தாயிகளே என்றும் அத் தாய முறையைத் தங்கள் முன்னோர்கள் மேற்கொண்டு விட்டார்களென்றும் சான்றுகூறி விவாதத்தை முடித்தனர். இது நிகழ்ந்தது கொல்லம் 292-ம் ஆண்டில்[1] (அதாவது கி.பி. 1116) என்று ஸ்ரீபத்மநாப சுவாமி கோயிலிலுள்ள ஓர் ஓலைப்பத்திரம் தெரிவிக்கிறதெனத் திருவிதாங்கூர்த் தேசச் சரித்திர்ம் (Travancore State Manual) கூறுகிறது.

இங்கே கூறிய இரு செய்திகளாலும் அநாதியாக மக்கள்-தாய முறையைக் கொண்ட நாஞ்சினாட்டு வேளாளர் அரசியற் காரணங்கள் பற்றி மருமக்கள்-தாயமுறையைக் கைப்பற்றின ரென்பது உறுதியாகின்றது. பிற்கூறிய தாய முறையின் முக்கியாம்சங்கள் மிகவும் விசித்திரமானவை. ஒரு காரணவனது பூர்விகச் சொத்து அவனது சகோதரியின் குழந்தைகளுக்குத் தாயமுறைப்படி இறங்கும். அவனுடைய குழந்தைகளுக்கு ‘உகந்துடைமை’ என்னப்படும் ஒரு சிற்றுரிமையைத் தவிர வேறு யாதொரு பாத்தியதையும் இல்லை, சகோதரியின் குழந்தைகளுக்கும் பூர்விகச் சொத்தைப் பாகப் பிரிவினை கேட்க உரிமையில்லை. இந்நிலையில் தன் குழந்தைகள் ஒரு பக்கமும் தன் சகோதரிகளின் குழந்தைகள் ஒரு பக்கமுமாகக் காரணவனை அரித்துத் தின்பதுதான் நாஞ்சினாட்டுக் குடும்பத்தின் சாதாரண கதியாய் விட்டது. இயற்கையான அன்பு தன் குழந்தைகள் மீது செல்ல, செயற்கையான சட்டம்


  1. கலைமகள் 1,585 பார்க்க. இங்குக் குறிப்பிட்ட காலம் சோழரது ஆதிக்ய காலம்: ஆதலால் இக்காலக் குறிப்பு ஐயப்பாட்டினாற்கிடனாயுள்ளது.