உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுமணப் பெண்

இருவரும் வருந்துகின்றீர்கள்; பட்டினி கிடக்கும் மக்களைக் கண்டு பரிகின்றீர்கள். இங்கு உலகம் இவ்வாறு வாடுகிறது. இந்த உன் வருத்தத்திற்கு அவரும் வருந்துகிறார். அவர் வருத்தத்திற்கு நீயும் வருந்துகிறாய். இதுதான் தவம். உலகிற்கு எனத் தவம் கிடக்கின்றீர்கள். உன் வாட்டம் கண்டு அவர் தவம் கிடக்கின்றார்: அவர் தவம் கண்டு நீ தவம் கிடக்கின்றாய். 'உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு.' மேலும் பிறருக்கு உதவவேண்டும்—வேளாண்மை செய்ய வேண்டும்—என்ற வேள்வி நாட்டமாம் பரிவும், அருளுள்ளமும் உங்களிடம் உண்டு. தவம் என்றால் துறவிகள் தாம் செய்வர் என்று பலர் கருதுகின்றனர். துறவிகளுக்கு உணவளிப்பதற்காக இல்லறத்தார் துறவினை மறந்தனரா என்று கேட்கின்றனர் சிலர். 'துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றையவர்கள் தவம்' எனபது முழு உண்மை அன்று: வேண்டுமானால் அரை உண்மை எனலாம். பெரியோர்களுக்கென எப்போதும் தவம் செய்பவரே இல்லறத்தார். 'துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி நிரந்தரமாம் மற்றையவர்கள் தவம்'—இதுவே முழு உண்மை. உங்கள் வாழ்வில் நீங்கள் காணவில்லையா?"

"வருத்தம் எல்லாம் தவமா?"

"பின் என்ன? வீண் வருத்தம் வெறும் வருத்தம். பிறர்க்கென வருந்துவது தவம். உனக்காகத்தானே இத்தனையும்? வேறொரு பெண்ணை மணக்கவா தவம்கிடந்து வருந்துகிறார்...ஆம், ஆம். மற்றொரு பெண்ணை மணக்கத்தான் இந்தத் தவம் எல்லாம். நல்ல பெண்ணை

55