உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

மணக்கவேண்டுமானால் தவம் செய்ய வேண்டாவா ?" என்று தோழி சிரிக்கின்றாள்.

"என்ன! மற்றொரு பெண்ணை அவர் மணப்பதா ?"

"பொறாமையா? ஆனால், நீதானே மகிழ்ச்சியோடு பாடினாய்."

"நான் பாடினேனா? என்ன இது? இடிமேல் இடி."

"இடிமேல் இடி இல்லை. விடுகதைக்குள் விடுகதை. நீ விடுவித்த விடுகதைதானே."

"நான் எப்போது விடுவித்தேன். என் மனத்தினைக் கலக்காதே."

"கலக்கம் ஏன்? களிப்புத்தான் ! ஒரே பெண் தான். ஆனால், சூழ்நிலைக்கேற்ப வேறு வேறு பெண்ணாகலாம்: 'நாய் வயிற்றிற் கரு நாயாம்: மனித வயிற்றிற் கரு மனிதனாம்' என்பது நீ கூறும் உவமை அன்றோ?"

"நீ கூறுவது ஒன்றும் விளங்கவில்லையே !"

"அவருடைய ஆசிரியர் வந்ததனைப் பற்றிப் புகழ்வாயே! அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்!"

4

கோடைக்காலம். ஒரே வெயில் கொளுத்துகிறது. தோட்டத்திலும் புழுக்கம். கதிரவன் மலையில் விழுகிறான். மஞ்சள் வெயில்...பின் செவ்வானம்...மாலை மயக்கம்...இருட்டு...கூடு திரும்பும் குருவிகளின் இசையரங்கு...தென்றல் விருந்து...அமைதி...இவ்வாறு உலகம் மாறிமாறித் தோன்றுகிறது. அவன்,உடல் குளிரப் பொய்கையில் ஆடி வரப்போகிறான். வீட்டின் முற்றத்தே முல்லை-

56