உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுமணப் பெண்

"ஒரு வேலையும் இல்லை. சமையல் வேலைதான்—சிறிது செய்ய வேண்டும்."

"மனைவி கணவனைப் பேணுவதில் தாயுமாவாள் என்பதனை உன்னிடம் உணர்கிறேன். எனக்குப் பெருவிருந்தொன்றும் அமைக்க வேண்டா. நீ உன் வேலையைப் பாரம்மா! நான் வான் மீன்களைப் பார்த்துக்கொண்டே சிறிது ஓய்வாக இருக்கிறேன்."

உள்ளே போகிறாள். பாலும் பழமும் உண்பதாகக் கணவனும் மனைவியும் முடிவு செய்திருந்தனர். வந்தவர்க்கு என்ன உணவு அமைப்பது? சமையல் செய்யும் ஆளும் இல்லை. உணவுப் பொருள்களை எங்குப் போய் வாங்கிவருவது! வந்தவரோ, களைத்திருக்கிறார். காலம் தாழ்த்தவும் கூடாது. கடம்பமான் இறைச்சி இருந்தது நினைவிற்கு வருகிறது. புறக்கடையில் உலர்ந்த கிளைகளை ஒடித்து வருகிறாள் அவள். சக்கிமுக்கிக்கல் கொண்டு பஞ்சில் தீ மூட்டி அடுப்பைப் பற்ற வைக்கின்றாள். முன்பின் செய்தறியாதவள் என்று தெரிகிறது, கை தேய்கிறது. வெள்ளைக் கொழுப்புப் படிந்த அந்த ஊனிறைச்சியைப் பதம் செய்து நெய்யிட்டு அவள் சமைக்கிறாள். சுவை ஊட்டுகின்றாள்; உணவு ஒருவகையாக அமைகிறது. வேலை செய்தறியா மெல்லிய கைகள்...ஒளி பெற்ற நெற்றி...மெல்லியலுக்கேற்ற உடல் மென்மை...இவை எல்லாம் தோன்ற அவள் வெளிவருகிறாள். புகை படிந்த நெற்றியில் முத்துப் பூத்தாற்போல வியர்வை அரும்பி நிறைந்துள்ளது. விரைந்து செய்த அலுப்பில் பெருமூச்சு விட்டுக்கொண்டு குறுகுறு நடந்துவருகின்றாள்.

தலைவன் இதற்குள் வந்துவிடுகிறான்; தன் ஆசிரியரைக் காண்கிறான். "வாரா விருந்தோ வந்துள்ளது.

59