உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. தினசரியா பாட்டு?



1

சங்கத் தமிழின் சிறப்பியல்பு அகம் என்றும், புறம் என்றும் பாக்களைப் பகுத்துப் பேசுவதுதான். "அகம் என்றால் காதல்; புறம் என்றால் வீரம்" என எளிதாகப் பலர் விளக்கிவிடுகின்றனர். புறப்பாடல்களில் காதற்பாடல்களும் உண்டு: அகத்தில் போர்க்களமும் வரும். முல்லைப் பாட்டுப் பாசறையைப் பாடவில்லையா? பின் என்னவோ வேற்றுமை? குறித்த ஒரு தலைவன் பெயர் அகப்பாட்டில் வருதல் ஆகாது. பாண்டியன், வேப்பமாலை என்ற குறிப்புக்கள்கூட வருதலாகாது என்பர் நச்சினார்க்கினியர். எனவே, ஒரு காலத்து வாழும் மக்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் வரும் பாடலாகாமல், எக்காலத்துக்கும் பொருந்த அகப்பாடல்கள் அமைதல் வேண்டும் என்பதாயிற்று. ஆனால், பாடல்கள் எல்லாம் ஒருகாலத்தைப் பற்றி எழுந்தாலும், காலத்தையும் கடந்த

66