உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

பாவம் பாவம் என்கின்றனர்; அவரைப் பழிக்கின்றனர்" என்று முடிக்கின்றாள்; பெரும் பழியின் ஆரவாரத்திற்கு ஓர் உவமை கூறுகின்றாள். அவளும் அவளூரும் அறிந்தது ஒரு செய்தி போலும் அது! சேரன் குட்டநாட்டுத் தலைவன் ஆதலின், குட்டுவன் என்றும் அவனுக்குப் பெயர். அவனுடைய ஊர் கழுமலம் (சீகாழி யன்று). அஃது ஒரு கோட்டை. கிள்ளி வளவன் ஒரு சோழன். சோழர்களுக்குச் செம்பியர் என்றும் பெயர் உண்டு. இந்தச் செம்பியனுக்கும் சேரனுக்கும போர் மூண்டது. சோழன், சேரநாடு சென்று, குட்டுவனுடைய கழுமலக் கோட்டையின் மதில் (அகப்பா) முழுதும் அழியத்தாக்கினான். நூறி நுறுங்குகிறது அகப்பா; கடும்போரின் கொடுமை அதனோடும் நிற்கவில்லை; பட்டப்பகலில், செம்பியன் அந்த ஊரைக் கொளுத்துகிறான்; 'இது ஒரு வீரயாகம்' (பகல் தீ வேட்டல்) எனக் கருதுகிறான் போலும்! ஊரார் என்ன ஆகி இருப்பர் ! கண்டவர் என்ன நடுங்கி இருப்பர்! இந்தக் கடும்போரின் ஞாட்பின் — ஆரவாரம் மிகமிகப் பெரிது. "குய்யோ முறையோ! ஆ ஆ கொடுமை? என்ன வீரம்! என்ன வீரம்!" என்ற முறையீடுகள் ஒருபுறம்; போரின் குழப்பம் ஒருபுறம்; ஊர் எரிதலால் மதிலும் மாளிகையும் விழும் இடி ஒலி ஒருபுறம்.

"இந்த ஞாட்பின் ஆரவாரத்தைவிட உன்னைப்பற்றி ஊரார் எழுப்பும் அலர் மிகப்பெரிது" என்று சுட்டுகின்றாள் தோழி.

இதன் பொருள் என்ன? சோழன், சேரன் நாட்டினுட்புகுந்து, உட் கோட்டையையும் அழித்துத் தீ மூட்டிவிட்டான். தலைவன், தலைவியின் நிறையைத் தகர்த்துப்

74