உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தினசரியா பாட்டு?

தலைவி. முன்னொரு கால் பிற நாட்டாரிடமிருந்து தோழியறிந்ததனை அவள் வாயாகத் தலைவி உணர்ந்தது ஈதே ஆம். இஃது இப்போது நினைவுக்கு வரத் தலைவி கூறுகிறாள்.

தோழியின் கூற்றிற்கு இதில் என்ன விடை உண்டு? காதலன் பெருந்துன்பங்கண்டு காடும் மலையும் உடன் புலம்பப் பிடி நின்று பிளிறுவது தலைவர் காதிலும் வந்து இயம்பும் அன்றோ? விலங்குகளின் நிலையே இப்படியானால். மக்களின் தலைசிறந்த தலைவியின் நிலை என்ன என்று அவர் எண்ணிப் பாராரா? எண்ணிப் பார்த்தால், விரைவில் பொருள்கொண்டு திரும்பி வந்து நல்காரா?

மற்றொன்றும் இங்குத் தோன்றுகிறது. "தலைவன் அடியோடு கெட்டான் என்று பலர் பழிப்பதும் நடுங்குவதும் அறியாமையே ஆம். பிடி புலம்புவது ஒரு கண்மயக்கில் மருண்டு வெருண்டே அன்றோ? தலைவனாம் யானை பாம்பால் கடியுண்டு கிடக்கவில்லை; மெல்லிய காந்தளிடையே இன்பமாகக் கிடக்கின்றது. தலைவனும் கொடுமைப் பாம்பு வாய்ப்பட்டுத் தலைவியை மறக்கவில்லை; அவளுக்கு எனவே இன்பமூட்டும் பொருளைத் திரட்டப்பொருளிடையே கிடக்கின்றான்; காந்தள் போன்ற அவள் கைவிரலின் பிடியை நினைத்துக்கிடக்கின்றான். தலைவியை மறந்ததாகக் கொண்டு தோழியும் பிறரும் பழி தூற்றுவது அறியாமையே ஆம். தலைவியாம் கன்னியின் கற்பு! மனம் புலம்பியதன் எதிரொலியன்றோ தோழியின் கூற்றும் பிறவும். ஆதலின், அப் புலம்பலும் அறியாமையே ஆம் எனத் தன்மேல் பழியை ஒருவாறு ஏற்றுக்கொண்டு தலைவி தலைவனை இயற்பட மொழிகின்றாள். "ஊரார்

79