உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவளே மருந்து

எழுவதன் முன்னர்ச் சில் என்ற திருக்குளத்தில் குளிக்க வேண்டும். தோழியர் காத்துக்கொண்டிருப்பர்.

அவன்: நான் காத்துக்கொண்டிருக்கவில்லையா? கணவனுக்காகத்தானே தைந் நோன்பு !

தோழி: கணவன் என்றால் நீர் தாம்போலும்! மலைமேல் ஏறி மணாளனைப் பிடிக்கவேண்டுமா? எங்கள் ஊரில் செல்வப் பிள்ளைகள், கண்ணுக்கினிய காதற்பிள்ளைகள் இல்லையா?

அவன்: இனியா தேடவேண்டும்? முன்னரே முடிந்த முடிபு !

தோழி: நீர் முடித்த முடிபா ?

அவன்: கடவுளும் என் கண்ணும் கண்ட முடிபு.

தோழி: உம்கண் காணாதா !

அவன்: என் கண், என் உயிர், உங்கள் உயிர்த்தோழி!

தோழி: கணவனை முன்னரே கண்டிருந்தால், கன்னி நோன்பு நோற்பாளா? "அன்பான கணவனார் அமைந்திடுதல் வேண்டுமம்மா ! இன்பம் அதுவன்றோ அருளேலோர் எம்பாவாய்!" என மணலாலே நாங்கள் வகுத்து வழிபடும் தாய்க்கடவுளிடம் வேண்டிக்கொள்வது, காதற் கணவனை எதிர் காலத்தில் அருளவே அன்றோ? "இனி அருளாய்" எனப் பாடுவாளா? வேறொரு கணவனை வேண்டுவதாக முடியாதா? கடவுளையுமா ஏமாற்றுவாள்?

அவன்: கடவுள் அறியாத கருத்தா? காதலுக்குத் தான் கள்ளம் ஏது?

101