உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

படலாம்படி பரந்துகிடக்கும் பார்நிலம்—இதுவே, இம்மாநிலமே எல்லாமாய் நிற்கும் பெரும்பொருளின் அடிநிலை; செவ்விய திருவடி; சேவடி, எல்லாம் நிற்பதற்குள்ள இடமே நிலம் எனப் பெயர்பெறும். சிவன் திருவடி அன்றோ அத்தகைய நிலையான இடம்? ஓரடியால் அம்மண்ணினை அளந்தான் மாயன் என்று புராணம் பேசவில்லையா? கருத்தும் கலங்கும் ஆழத்தில், எங்கும் பரந்து, மேலும் கீழும் ஒன்றாக நிற்கும் நிலம்—நாம் காணும் தரையும், காணாத் தரையுமாம் இந்த நிலம்—இவ்வாறு விளங்குகின்ற காட்சி—மலையும் ஆழமுமாகக் கண்ணைக் கலக்கும் தோற்றம்—இஃதே ஆற்றலின் அடிப்படை. ஆனால், அங்கும் ஒரு செம்மை—ஓர் அழகு—ஒரு தாய்மை அன்பு—தோன்றுகிறது. அகழ்வாரைத் தாங்கும் நிலம் அன்றோ அஃது? அறிவும் ஆற்றலுமாம் அடிப்படையில் அனைத்தும் மலர்கின்றன. ஆனால், மலர்வது தாய்மை அருள். சேவடியின் அடிப்படை நிலையையும் செம்மையாம் அழகிய இன்ப அன்பினையும் இவ்வாறு உய்த்துணர்தல் வேண்டும்.

இயங்குகின்ற அப்பெரும்பொருள் எது? அவன்தான். அவன் உடுத்துக்கொள்ளும் உடையாம் ஆடையும் படபட என அசைகின்றது; முழங்குகிறது. ஆம்—நம் காதுக்கும் கேட்கிறது. சேவடியைத் தீண்டி, மேலே, அதோ தோன்றுகிறது. செவ்வான் கதிரவன் ஒளியில் திகழும் நிலையே பொன்னாடை. அவனைப்போல அவனாடையும் அளவற்று எங்கும் விரிந்து கிடக்கிறது. பவ்வம் என்பது பரந்து கிடப்பது. எது அது? கடலே ஆம். அதுவே அவன் ஆடை. வானைப் பாயைப் போலச் சுருட்டுவது ஒரு மாய வித்தை. நீரை ஆடையாகச்

110