உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மருமக்கள்வழி மான்மியம்

பொருட்சுவை சொற்சுவை பொருந்திவந் திடுமோ?
எதுகை மோனை இசைந்துவந் திடுமோ?
அணிகள் பற்பல அடுக்கிவந் திடுமோ?
ஆதலின், இதனைப்
பதவியும் பணமும் படிப்பு மிலாதேன் 20
பஞ்சப் பாட்டெனப் பழித்திக ழாதீர்.
இலக்கண வழூஉக்கள்[1] இருப்பினும், அவற்றை
வலித்தல் மெலித்தலாய் மதித்துக் கொண்மின்
நீட்டல் குறுக்கலாய் நினைத்துக் கொண்மின்[2]
விரித்தல் தொகுத்தலாய் விளக்கிக் கொண்மின்
பழையன திரிதலாய்ப் படித்துக் கொண்மின்
புதியன புகுதலாய்ப் பொறுத்துக் கொண்மின்.[3]
இன்னும்,
அமைக்கும் விதியறிந் தமைத்துக் கொண்மின்.
நாயேன் 30
கொண்ட கருத்தைக் குறைவறக்
கண்டு கொள்வது பெரியவர் கடனே.


  1. 23. இலக்கண வழூஉக்கள்: இலக்கணப் பிழைகள்.

  2. 28-25. செய்யுள் விவகாரங்கள்:
    வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்
    விரித்தல் தொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி.
    (நன்னூல்,105)

  3. 26-27. பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல கால வகையி னானே.

    (நன்னூல், 462)