உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 வீட்டிற்குப் போனதும் மங்கம்மாள் மலர்க்கொடியைப் பார்த்து, "ஏன் பெண்ணே நாம் சௌந்திரத்தைப்பற்றிப் பேசும்போது, உன் சங்கரன் முகம் எப்படி இருந்தது கவனித்தாயா" என்று கேட்க, மலர்க்கொடி, "ஒரு மாதிரி "போகப் யாகத்தானிருந்தது" என்றாள். மங்கம்மாள், போகத் தெரியும்" என்று கூறினாள். உள்ளபடி, சௌந் திரம் என்ற நாடகக்காரியின் அக்காள் மகள் மலர்க்கொடி என்ற சேதி சங்கரனுக்கு விசாரத்தைத்தான் கிளப்பி விட்டது. அவன் அதுவரை எண்ணிக்கொண்டிருந்தது, சிங்களச் சீமாட்டி மங்கம்மாளின் மகள் மலர்க்கொடி என் பதே! அது ஒரு நாடகக்கார குடும்பம் என்பது தெரியாது. சிங்கள நாட்டிலே பல ஆண்டுகள் இருந்துவிட்டு சென் னைக்கு வந்த குடும்பம் என்றும், அதிலே மணம் புரிந்து கொள்வது தனக்குப் பெருமை என்றும் எண்ணினான் சங்கரன். அன்றைய விருந்தின் போதுதான் தெரிந்த விஷ யம். நாடகக்காரி சௌந்தரம்! அவள் தமக்கை மங்கம்மாள். இவளும் ஒரு நாடகக்காரி தானே. இவள் மகளா மலர்க் கொடி! ஐயோ! இவளை நான் மணம் புரிந்துகொள்வதா. நாடு நகைக்காதா,கூத்தாடிச் சிறுக்கியை, கொங்கு நாட்டு வேளாளக் குடி பிறந்த நானா மணப்பது ? என் குடிப் பெருமை என்னாவது. சிச்சீ! ஜய்யோ! என்று விசாரப் பட்டான் சங்கரன். ஜாதி உணர்ச்சி அவனுக்கு அவ்வளவு இருந்தது. 3 சிங்களச் சீமாட்டி என்று பலராலும் அழைக்கப் பட்ட மங்கம்மாள் நல்ல நாயுடு வகுப்பு. சிறு வயதிலேயே விதவையாகிவிட்டாள், பள்ளியில் படித்துக்கொண்