உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கிரசன்மன்'

அக்கிரசன்மன் 2 (அக்கிரசன், அக்கிரன்) பெ. தமையன். (கதிரை. அக.)

அக்கிரசாலை பெ. அந்தணருக்கு உணவிடும் இடம் மெச்சும் அக்கிரசாலை (திருவனந்தை விலா.236).

அக்கிரசாலைப்புறம் பெ. அந்தணருக்கு உணவிடுவதற் காக விடப்பட்ட மானியம். (செ.ப.அக.)

அக்கிரணி பெ. முதல்வன். (முன்.)

அக்கிரதாம்பூலம் பெ. ஒருவருக்கு முதலாவதாகக் கொடுக்கும் தாம்பூல மரியாதை. (முன்.)

அக்கிரபூசனை (அக்கிரபூசை,

அக்ரபூசனை )

பெ.

(யாக முடிவில் அவையில் செய்யும்) முதல் மரி யாதை. ஆர்கொலோ அக்(கி)ர பூசனைக்குரியார் அரசரில் (பாரதம். 2,2,112).

அக்கிரபூசை (அக்கிரபூசனை,

அக்ரபூசனை) பெ.

ஒருவருக்குச் செய்யும் முதல் மரியாதை. (செ. ப. அக.)

அக்கிரம்1 பெ. 1. முதன்மை இடம், முதல் மரியாதை. அக்கிரப் பெருஞ்சிறப்பு எய்தி(சூளா. 1504).2. நுனி தருப்பை கைக்கொண்டு அக்கிரங் கிழக்கதாக இந்நிலம் புகழ நீவி (இரகு. கடி. 79). நாசாக்கிரத் தைப் பார்த்து (தத்து. பிர. 60 உரை). 3. உச்சி. பரு வத அக்கிரத்தில் மண்டலமிட்டு (சிலதரு. 11,58 உரை). அக்கிரம் 2 பெ. 1. தெய்வத்திற்குப் உணவு. ஒரு கலம் அக்கிரம் (தெ.இ.க.5,782).2. ஒரு கவளமோ நான்கு கவளமோ பிச்சையாக இடுகை. கவளம் ஒன்று இடுதல்... நான்கினிதளித்தல் ...அக் கிரம் ஆகும் (கூர்மபு, உத்தர. 18,17).

படைக்கப்பட்ட

அக்கிரம்3 பெ. (சோதிடம்) கிரகம் கீழ்மேல் விதி நீங் குகை. (வின்.)

அக்கிரமகாதேவியார் பெ. அரசனுடைய முதல் தேவி. (சென்னை. கல். அறி. 165-1925 | செ. ப. அக. அனு.)

அக்கிரமண்டபம் பெ. கோயிலின் முக மண்டபம். இறை யனார் கோயில் திரு அக்கிரமண்டபம் முன்பு (தெ.இ.க.17,561).

அக்கிரமம் பெ. 1. முறைகேடு. அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரருக்கு (தேவா. 7, 37, 4). அக்கிரமமாக மகம் ஆற்றி... தக்கன் (பெருந். பு. 23, 4). 2. அநீதி அக்கிரமும் மிஞ்சிப் போச்சோ

(மலைய. ப. 66).

அக்கிரமத்திலே பெயர் பெற்றவன் (சர்வ. கீர்த். 9,1).

11

அக்கிராரம்

3. தொல்லை. இன்று இரவில் மின்சாரம் கிடை யாததால் ஒரே அக்கிரமம் (நாட் .வ.).

அக்கிரமாமிசம் பெ. இதயம். (வின்.)

அக்கிரமி 1 -த்தல்

11a. தீங்கு செய்தல்.

அக்(கி)

ரமித்த பற்றலர்க்கு (பஞ்ச. திருமுக.81).

அக்கிரமி ' பெ. நீதி தவறியவன். (செ. ப. அக.)

அக்கிரன் (அக்கிரசன், அக்கிரசன்மன் 2) பெ. தமை

யன். (aflair.)

அக்கிரா (அக்கிரகாரம், அக்கிராரம்) பெ. அந்தணர் கூடி வாழும் ஊர் அல்லது ஊரின் பகுதி. (ராட்.அகூ ) அக்கிராகாரம் பெ. ஒரு மருந்து வேர். (வைத். விரி. அக. ப. 4) மாசற்ற அக்கிராகாரம் ... ஒரு பலம் (போகர்

700 316).

அக்கிராகியம் பெ. 1. கொள்ளத்தகாதது. (செ. ப. அக.) 2. புலன்கள் அறியமுடியாதது. (சி.சி. பாயி. சிவாக்.)

அக்கிராசன்

பெ. (சோதிடம்) எலும்புருக்கி நோயை (செ.ப.அக. உண்டாக்குவதாகக் கருதப்படும் கோள்.

அனு.)

அக்கிராசனம் பெ. அவையின் தலைமை இடம். ராமை யங்கார் அக்கிராசனம் வகித்தார் (அருகிய வ.).

அக்கிராசனர் (அக்கிராசனாதிபதி) பெ. அவைக்குத்

தலைமை தாங்குபவர்.

இளைஞர்

மகாநாடு

...

அவரை அக்கிராசனர் ஆக்கவேண்டும் என்று தீர் மானித்தது (முன்.).

அக்கிராசனாதிபதி (அக்கிராசனர்) பெ. தலைமையேற் பவர். காங்கிரெசுக்கு சீயுத காந்தியை அக்கிரா சனாதிபதியாகத் தெரிந்தெடுத்த சம்பவம் (பாரதி புதை. ப. 340).

அக்கிராந்தம் பெ.சோம்பு. (பச்சிலை. அக.)

அக்கிராமியம் பெ. பச்சையாகச் சொல்லாது மறைப் பது. (திவ்ய. அக.ப. 2)

அக்கிராரம் (அக்கிரகாரம், அக்கிரா) பெ. அந்தணர் வாழும் ஊர் அல்லது ஊரின் பகுதி. அக்கிராரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா? (பழ. அக. 50).