உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பைக்கின்னரி

3

அகப்பைக்கின்னரி

பெ. அகப்பை வடிவில் இரு தந்தி

யுடைய சிறு இசைக்கருவி. (செ.ப.அக.)

அகப்பைக்குறி பெ. 1. அகப்பையளவு. (திருவாய். 1, 4, 6 அரும், செ. ப. அக.) 2. நெற்குவியலின் மேல் அகப்பையினால் இடும் சாணப்பால் குறி. (நாட். வ.) 3. அகப்பை கொண்டு பார்க்கும் நிமித்தவகை. (செ.

ப. அக.)

அகப்பைக்கூடு பெ. அகப்பை செருகும் சட்டம். (நாட்.வ.) பெ. கரண்டி முதலியன செருகி

அகப்பைச்சொருகி

வைக்கும் சட்டம். (நாட். வ.)

அகப்பைநோய் பெ.பட்டினி. (ரா. வட். அக.)

அகப்பொருட்கோவை பெ. அகப்பொருள் தழுவிக் கட் டளைக் கலித்துறையால் நானூறு செய்யுள் கொண்ட தாகச் செய்யப்படும் நூல். கலித்துறை நானூறாகக் ...கூறுவது அகப்பொருட்கோவை (இலக். வி. 816).

அகப்பொருட்டுறை பெ. உரைப்போரும் கேட்போரும் இன்றிப் புலவன் தானே கூறுவது என்னும் அகப் பாட்டு உறுப்பு. (நம்பியகப்.234)

2.

அகப்பொருள் பெ. 1. அகவொழுக்கம். உலகத்து நடக்கும் அகப்பொருட் செய்யுளிலக்கணம் எல்லாம் (இறை. அக. 1 உரை). அருந்தமிழ் அகப்பொருள் (நம்பியகப். 1). அகப்பொருள் மார்க்கம் உணர்ந்து (இராம. திருப்பு. 4). அகவொழுக்கத்தைக் கூறுகின்ற நூல். அகப்பொருள் அம்பிகாபதி கம் புனைந்தேன் (அம்பி. கோ.அவையடக்.). 3. அகத் திணைக்கு இலக்கணம் வகுத்துக் கூறும் நூல். இறை யனாரகப் பொருள், நம்பியகப்பொருள் (நூ.பெ.). எழில்திகழ் கூடல் இன்பால் அகப்பொருளின்

பயனை

காமவின்

(திருவால. பு பயகரமாலை 19). 4. பம். நீ புறப்பொருளை விரும்பி அகப்பொருளைக் கைவிட்டு (கலித். 15, 10 நச்.). 5. உட்பொருள். நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார் கவிகள் ஆகுவார் (கம்பரா.6,3,32).

அகப்பொருள்விளக்கம் பெ. நாற்கவிராச நம்பி பாடிய நம்பியகப்பொருள் என்னும் நூல். அகப்பொருள் விளக்கம் என்று அதற்கொரு நாமம் (நம்பியகப்.

பாயிரம்).

அகம்' (அகன்') பெ. 1. உள், உள்ளிடம், உட்பகுதி. களவன் தண் அகம் மண்ணளைச் செல்லும் (ஐங்.

0

அகம்1

27). அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் (குறள்.745). பாயாது உபாயமா ஊரகத்து மெல்ல நடவாயோ (முத்தொள். 52). இதழ் அகத்துத் தாதி ணர்க் கொன்றை (ஐந். எழு. 18). படிவத்தோரை யும் அகம் புகவிடாது (பெருங். 3, 25, 24-26). நீண்டகன்று அகம் சிவந்த கண் (சீவக. 2982).நிரு தர் சேனை அடைந்தது... அன்னவர்

ஆனார்

9

அகத்தர் (கம்பரா. 6. 21, 17). பொழில் அகம் குடைந்து வண்டுறங்க (கருவூர். திருவிசை.1,11). ஆவி... அகத்ததோ புறத்ததோ (பாரதம். 8, 2,240). வெற்பு அகம் துளைத்தென (தெ.இ.க. 8,69,9). நத்து அகத்துறு முத்தமும் (செ.பாகவத.8,2,19).2 இடம். வரையகத்தால் (பரிபா. 8,90). ஆரணங்கின் முகம் ஐங்கணையான் அகம் (சேரமான். பொன்.55). மன்னுபேரகத்தாய் (திருமங்கை. திருநெடுந்.) அங் கண் மாஞாலம் என்னும் தாமரையகத்துள் (சூளா. 37). 3. இருப்பிடம், வீடு. புத்தகமே சாலத் தொகுத் தும் அகம் எல்லாம் நிறைப்பினும் (நாலடி.318). தன் அகம் புகுதாதே கோயில் தலைக்கடைச் அகம்புக

சன்றுநின்று (இறை. அக. 1 உரை).

.

ஆய்ச்சிதானும் கண்டு (பெரியாழ். தி. 2, 9, 4). பொற்பு அகம் ஆன... இலங்கை (கம்பரா.3,9, 43). அகந்தொறும் பலி திரி அடிகள் (கருவூர். திருவிசை. 10, 2). எந்தமை ஆளுடையவரே அகத்துள் எழுந் தருளும் (பெரியபு. 36,37). கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய் (பாரதி. கண்ணன். 57). 4. உள்ளம், மனம். அகமலி ஊடல் அகற்சிக் கண் ணும் (தொல். பொ. 157 இளம்.). இயன்றவெல்லாம் பயின்று அகத்தடக்கிய வேதமுதல்வன் (நற்.கட வுள்). ஐந்தும் அகத்தடக்கி (இயற். இரண்டாம். 26). அகங்குழைந்து மெய் அரும்பி (தேவா. 6, 61, 7). வாயில் யாதுகொல் என்று தன் அகத்தே நினைஇ (பெருங்.3,7,68). அகம் நெகவே புகுந்து (திருவாச. 5,29). அகம்நிறை அருள் மிக்கான் (கம்பரா. 2, 7, 32). அகமே...அரங்கருக்கு ஆட்செய் (திருவரங். அந். 63). அகத்தில் ஒளிரும் மதியே (சர்வ.கீர்த். 17,3). அகத்தினிலே துன்புற்று அழுதேன் (பாரதி. தோத்திரம். 66). 5. மார்பு. பூண் அகம் நனைப்ப (புறநா. 144,5). நல் அகம் நயந்து தான் உயங்கி (குறுந். 346). தோளதிர்பு அகஞ்சேரத் துவற்றுமிச் சின்மழை (கலித். 31, 16). சாந்து அகங்கிழிய... புல்லி (சீவக. 2552). மொய்ம்பர் அகங்களைக் கழன்று (கம்பரா. 6, 14, 145). அணைத்து அகந்த னில் இணைமுலை எதிர்பொர (திருப்பு. 450). உடம்பு. அகத்து எலும்பு முறித்திடுவர் (சிவதரு. 7, 146). 7. இல்லற இன்பம். ஒருவனும் ஒருத்தி யுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம்...

6.