உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகர்முகம்

அகர்முகம் பெ. (பகலின் தோற்றம்) வைகறை. ஆறு மடுவில் அகர்முகமாப் பாடுநர்க்கு (தைலவ. பாயி. 53/செ.ப.அக.).

அகரச்சீர்மை பெ. அந்தணர் வாழுமிடம், அக்கிர காரம். (சென்னை. கல். அறி. 389,1916)

அகரப்பற்று பெ. அந்தணர்க்கு விடப்பட்ட நிலம். அகரப்பற்றும். வன்னியப்பற்றும் உட்பட (தெ. இ.க. 7,90).

...

அகரம்1 பெ. (அ+கரம்) கரம் என்னும் சாரியை இணைந்த தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத் தாகிய அ. அகர இகரம் ஐகாரம் ஆகும் (தொல். எழுத். 54 நச்.). அகர முதல எழுத்தெல்லாம் (குறள்.1). அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய் (தேவா. 7, 3,7). எழுத்தில் அகரம் யாம் (செ. பாகவத. 11, 8, 6). அகர உயிர் எழுத்து அனைத்து மாகி (தாயுமா. 3, 12). அகர உயிர்போல்... நிகரிலிறை நிற்கும் (திருவருட்பயன் 1).

.

அகரம்' பெ. 1. அந்தணர் வாழுமிடம். அகரம் ஆயி ரம் அந்தணர்க்கு ஈயில் என் (திருமந். 1860). புக்கு இலதாய் அமைந்தது அயன் அகரம். அகரம்-அந்த ணர் இருக்கை (மாறனலங். 704). நாடு எழிற்புரங் கள் என்றும் நகரென்றும் அகரமென்றும் (செ. பாகவத. 4, 4, 64). ஆலயம் அகரம் (பிரபோத. 6, 44). திருநாமத்தால் வைத்த அகரத்து (தெ.இ.க.8,43, 3). 2. ஊர். ..அகரம் புரமே நகரப் பொதுப் பெயராகும் (பிங். 626). 3. (பெரும் பகுதி வேளாண்மைத் தொழிலுடைய) சிற்றூர். (சென். இரா. சொற்பட்டி. 9) மன்னிய 4. வீடு. அகரம் எங்கே காட்டுதி என்றார் (திருக்கோவ.பு.23,32). அடுத்திருந்த அகரம் ஏறி ஆன பொருள் அத்தனை யும் எடுத்துவந்து (பழைய. நீலி. ப. 8).

அகரம்' பெ. பாதரசம். (வைத். விரி.அக. ப. 1)

அகரமுதலி பெ. (இக்.) ஒரு மொழி அல்லது சிறப்புத் துறை பெற்றுள்ள சொற்களை அம்மொழிக்கு இயல் பான எழுத்துமுறை வரிசையில் அமைத்துப் பொருள் கூறும் நூல். செந்தமிழ் அகர முதலி (புதிய வ.).

அகரமேற்று -தல் 5வி. அந்தணரைக் குடியேற்றுதல். விமானப் புரிசை செய்து அகரமேற்றி நன்றிகொள் தேவதானம் நல்கி (திருவால. பு. 48, 22).

அகரவுப்பு பெ. கல்லுப்பு. (சித். பரி. அக. ப. 153) பெ. சொ.அ. 1-3 அ

3

5

அகருதூளி

2.

அகராதி பெ. 1. அகரம் முதலிய எழுத்துக்கள். ஐந்து கலையில் அகராதி தன்னிலே (திருமந். 978). தொகுதி, கூட்டம். சொல்லகராதி விரிய (முன். 2292). 3. ஒரு மொழி பெற்றுள்ள சொற்களை அம் மொழிக்கு இயல்பான எழுத்துமுறை வரிசையில் அகரம் ஆதியாக அமைத்துப் பொருள் கூறும் நூல். ஆதர வால் அகராதி...ஓதினன் (அக.நி. பாயிரம்). தமிழ்ச் சொல்லகராதி (மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அக ராதியின் பெயர்). 4. குறிப்பிட்ட துறையின் சொற்களை அகரவரிசைப்படி அமைத்துப் பொருள் விளக்கும் சொற் பட்டியல். மருத்துவக் கலைச்சொல் அகராதி (புதிய வ.). 5. வீண் தர்க்கம் செய்யும் இயல்பு. அவன் அகராதி படித்தவன் (நாட்.வ.).

அகராதிக்கிரமம் பெ. ஒரு மொழிக்கு இயல்பான (அ -முதலான) எழுத்துமுறை வரிசை. (செ. ப.அக.)

அகராதிநிகண்டு பெ. 1. பதினாறாம் நூற்றாண்டில் சிதம்பரரேவணசித்தர் முதன்முதல் சொற்களை அகர வரிசைப்படி அமைத்து ஆசிரியப்பாவால் செய்த நிகண்டு நூற்பாவதனால்...அகராதி நிகண்டென ஓதினன் (அக.நி. பாயிரம்). 2. இதே பெயரில் அண் மையில் வெளியான மற்றொரு நூல். (நூ.பெ.)

நூல்.

அகராதிபடித்தவன் பெ. 1. அதிகங் கற்றவன்.(செ. ப. அக.) 2. இயல்பான கருத்தைவிட்டு முரணான கருத்துக் கொள்பவன். அவன் பெரிய அவன் பெரிய அகராதி படித்தவன், அவனோடு பேசாதே (செ.ப.அக.).

அகராது பெ. கொன்றை. (செ.ப.அக. அனு.)

அகரி பெ. புல்வகை. (சாம்ப. அக.)

அகரிடணம் பெ. பெ. 1. 1. வெறுப்பு. (செ.

2.கவலை. (முன்.)

(செ.ப.அக. அனு.)

அகரு (அகுரு) பெ. அகில். அகரு வழை ஞெமை யாரம் இனைய (பரிபா. 12,5). அகரு தூமத்தின் அழுந்தின முகிற்குலம் (கம்பரா. 5, 2, 29).

அகருணம் பெ. (அ + கருணம்) 1. (காதற்ற) பாம்பு. (சங். அக.) 2. செவிடு. (கதிரை. அக.)

அகருதம் பெ. வீற்றிருக்கை. (சிந்தா. நி. 13/செ. ப. அக. அனு.)

அகருதூளி பெ. அகிற் பொடி. அகரு தூளி கர்ப்புர தன இருகோட்டு அன்புற்று (திருப்பு. 36).