உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகழ்2

கிழங்கை அகழ்ந்தெடுக்கும்

அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் (மீனா.

பிள். 62).

அகழ்' பெ. 1.

கோட்டையைச் சுற்றியுள்ள அரணாகிய நீரகழி. செவ்வாய் எஃகம் வளைஇய அகழ் (பதிற் றுப். 33,9). குண்டகழ் நீள்மதில் (புறநா. 379,18). ஒழுகு புனல் அகழினை (பெருங். 2, 9, 186). அம் பொன்கோயில் பொன்மதில் சுற்றும் அகழ் கண்டார் (கம்பரா. 1, 10, 22). மதில்சூழுங் குண்ட கழ் (பெரியபு. 1,96). 2. குளம். வான்மடி பொழு தில் நீர் நசை இக்குழித்த அகழ் (பெரும்பாண்.

107-108).

அகழ்வாய்வு

(அகழ்வாராய்ச்சி) பெ. (தொல்

பொருள்.) மண்ணில் புதையுண்டு கிடக்கும் பண்டைய நாகரிகச் சின்னங்களை வெளிப்படுத்தும்

(ஆட்சி. அக.)

ஆய்வு.

அகழ்வாராய்ச்சி பெ. (தொல்பொருள்.) மண்ணில் புதையுண்டு கிடக்கும் பண்டைய நாகரிகச் சின்னங்களை வெளிப்படுத்தும் ஆய்வு. ...சின்னங்கள் அகழ்வா ராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டன

லாறு 10 ப. 2).

(வர

அகழான் பெ. (நிலத்தில்

வளை தோண்டும்)

அகழெலி. (வின்.)

அகழானெடு-த்தல் 11வி. வளைதோண்டுதல்.

(வின்.)

அகழி பெ. 1.நகர் அல்லது கோட்டையைச் சூழ்ந்துள்ள

நீர்க் கிடங்கு. கோள்வன் முதலைய குண்டுகண் அகழி (பதிற்றுப். 53, 8). கருமிளையுடுத்த அகழி சூழ் போகி (சிலப். 13, 183). கடிமாநகர் சுற்றும் நின்ற அகழியைத் தூர்த்திரால் (கம்பரா. 6, 14, 2). ஆயிரம் பெண்முதலை அகழிதனில் (காத்தவரா. ப. 14). 2. (அகழப்பட்டதாகிய) கடல். குண்டுபடு பேரகழி வயிறுளைந்தீன்ற பைங்கோதை (மீனா.

LAGIT. 55, 1).

அகழி' (அகளி)

1. பெ.

வாயகன்ற

பாத்திரம்.

ஓரகழி பெய்ததற்பின் (தைலவ. தைல. 94|செ. ப. அக.) 2. விளக்கு. (கதிரை. அக.)

அகழி பெ. ஓர் எண். (முன்.) 3

அகழிதிருத்து-தல் 5வி. சிறிய பள்ளங்களைத் தூர்த் துச் சமமாக்குதல். புன்செய்த்திடல் கல்லி அகழி திருத்தி (தெ.இ.க. 5,533).

42

அகழு

அகற்சி

பெ. பெருமரம். அகழு என்பது பெருமரம் ஆகும். (அக.நி.அம்முதல். 51).

அகழெலி பெ. நிலத்தில் வளைதோண்டி வாழும் எலி. இரும்பன் அகழெலி (பிங். 2534).

அகளங்கம் 1 பெ. களங்கமின்மை, குற்றமின்மை. அக ளங்கமாகிய இந்த ஏதுவினால் மரங்களுக்கு உயி ருண்மை முடியுமென்பது (நீல. 362 உரை). அக ளங்க உரு உடையானாகலின் உடையானாகலின் (செங்கழு. பிள். 32). அகளங்கம் 2 153)

பெ. சீதாங்கபாடாணம். (சித். பரி. அக.ப.

அகளங்கன் பெ. 1. மாசற்றவன், தூயவன். அகளங் கன் அன கன் அனாதி (நல். பாரத. கௌசி. 77). அடித்தது பொற்கிரி விக்கிரமசோழ அகளங்கனே (தமிழ்நா. 117). 2. சோழன். அகளங்கன் நமக்கு ரங்கான் (கலிங். 219). ஓங்கிய கொற்றப் புயம் இரண்டாற் கோமான் அகளங்கன் முற்றப் பரித்த தற்பின் (விக்கிர. உலா 117). 3.விக்கிரம சோழன் பூதலங்கள் ஆற்றுந் திருத்தோள் அகளங்கன்... கலிங்கப்பெரும் கொண்ட பெருமான்

பரணி

(குலோத். உலா 53-55). 4. புத்தன். அகளங்கன் முத்தன் புண்ணியமூர்த்தி (திவா. 12). 5. பிற் காலத்து ஏகம்பவாணன் தரித்துக் கொண்ட சோழர் பட்டப்பெயர். போர்புரிய வல்லான் அகளங்கன் வாணன் (பெருந். 1182).

அகளம்' பெ. 1. நீர் இறைக்கும் கூடை, நீர்ச்சால். அகளத்தன்ன நிறைசுனை (மலைபடு. 104 நீர்ச்சாலை ஒத்த நிறைந்த சுனைகள்-நச்.) 2. பெரிய மண் பாத்திரம், தாழி,மிடா. அகளமும் சாடியும்... தாழியின் சாற் சாடியும்...தாழியின் றிய பெயரே (பிங். 1736). 3.யாழின் உறுப்பாகிய வகை வயிறு சேர்பு ஒழுகிய பத்தர். அகளத்து (சிறுபாண். 224 தாழிபோலப் புடைப்பட்டிருத் தலின் அகளம் என்றார்-நச்.).

யமை

அகளம்' பெ. உருவமின்மை. தத்துவம் ஆகும் சகள அகளங்கள் (திருமந். 2396). அகளமாய் யாரும் அறிவரிது அப்பொருள் (உந்தி. 1). அகளமாய் உலகமெல்லாம் ஒடுக்கி (திருவிளை. பு. தீர்த்தவிசேட.3). அகளமெய் வடிவானந்த அற்புதக்கூத்தன் (கச்சி. காஞ்சி. திருக்கண். 281).

அகளி (அகழி2) பெ. தாழி. (வைத். விரி. அக. ப. 17) அகற்சி பெ. 1. நீங்குகை. அகமலியூடல் அகற்சிக் கண்ணும் (தொல். பொ. 157 இளம்.). 2. விடுகை,