உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

டி17

தாயினும் (பெருங்.1,53,132). 2. (இக்.) பன்னி ரண்டு அங்குலம் கொண்டதாகிய நீட்டல் அளவு. எண் பதடிக் கிணற்றிலேயும் (மலைய. ப. 240). அரை யடிச் சுவருக்காக (நாஞ். மரு. மான். 9, 147). 3. (யாப்.) சீர்களால் ஆன செய்யுள் அடி. நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே (தொல். பொ. 340 இளம்.). குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழி நெடிலடியெனக் கட்டுரைத்தனரே (யாப். வி. தமிழ்ப் பதிகம் நாலடியின் மேல (பெரியபு. 28, 425). அடுத்து நடத்தலின் அடியே (இலக். வி. 711).

அடி17

பெ.

23).

1. முதல். பெருமானடி என்றதில் அடி என்றது முதல் (தக்க. 323 ப. உரை). குழந்தை வெண்பிறை மருட்டு கோடு அடி குளிப்ப (செ.பாக வத. 10,21, 14). நடுவில் முடிவினில் அடியில் நன் றானபொருள் (ஞானவா. உபசாந்தி. சனகரா. 22). 2. காரணம், மூலம், அடிப்படை. பொழுது என்றது அதற்கு அடியாகிய கோளை (பதிற்றுப். 24, 25 ப. உரை). இன்று உதாசீனம் பண்ணியிருந்தாய் இதற்கு அடி என் (குருபரம்.ஆறா.ப.374). பனிமதி மர பிற்கு அடியும் நீ (பாரதம். 1, 1, 25). உமக்குப் பேற்றுக்கு அடி எத்தாலே என்று இருந்தீர் (பெரியதி. 1, 1, 4 வியாக்.). 3. ஆதாரம். அவ் அவதாரங்களுக்கு அடியாகத் திருப்பாற்கடலிலே வந்து (பெரியதி. 1, 2, 5 வியாக்.). 4. வேர். வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும் (குறள். 1307 மணக்.). அடி யொழி மரம் என அவனியில் விழுவது (திரு வாத.பு.51). அடியற்ற மரமென்ன அடியிலே வீழ்ந்து (தாயுமா. 12, 10). 5. கால்வழி, பரம்பரை. (இலங். வ.) 6. பழமை. அடியிட்ட அடியிட்ட செந்தமிழின் (தாயுமா. 37, 4). அடிதொட்டு வருகிற மரபு (பே.வ.). 7. கடவுள். ஆரே அறிவார் அடியின்பெருமை (திருமந். 2126). செங்காட்டங்குடிமேய திருவடிதன் திருவருளே பெறல் ஆமோ (தேவா. 3, 63, 7).

...

அடி18 பெ. 1. தேர் போன்றவை நிற்கும் இடம். தேரடியில் பார்த்தேன் (நாட். வ.). 2. ஒன்றை ஒட்டிய இடம். கிணற்றடிக்குப் போகாதே (முன்.) 3. வையாளி வீதி. வழங்கும்

அடியே செண்டுவெளியும்

முப்பேரே (அக. நி. அம்முதல். 145).

19

அடி

அடி20

.

பெ. மதுபானம். (செ.ப.அக.)

பெ.

...

1. சூதாடுவோர் குழுஉக்குறி. அடியிது பொட்டையீதென்பர் (கந்தபு. 6,14,168). 2. செல் வம். அடியுடையார்க்கு எல்லாம் கொள்ளலாமே (திருவாய். 6, 2, 9 ஈடு).

9

சாதித்துக்

to

6

அடி 21

அக,)

அடிக்கடிக்கு

பெ.

உபாயம். நல்ல அடிஎடுத்தாய் (செ.ப.

22

அடி பெ. அடிமை. அடிக்குடில் வீடுபெற்று உய்ந் தது (பெரியாழ். தி. 1, 1, 10).

23

அடி பெ. அடியில் தங்கும் மண்டி. (செ.ப. அக.

அனு.)

24

அடி?4

பெ. செருப்படை என்னும் மூலிகை. (செ.ப.

அக. அனு.)

25

அடி இ.சொ. 'அடா' என்பதன் பெண்பால், பெண்ணை விளிக்கும் சொல். நில்லடீஇ எனக் கடுகினன் (கம்பரா. 3, 5, 93). கைகேசி என்னடி செய்தாய் (இராமநா. 2,13 தரு). காத்திருப்பேனோடி - இது பார் கன்னத்து முத்தம் ஒன்று (பாரதி. கண்ணன். 16,3). ஏனடியம்மா யான் ஏகாங்கி (நாஞ். மரு. மான். 1, 46).

அடிக்கட்டு-தல் 5 வி. புண் புடைத்தல். (நாட். வ.)

அடிக்கட்டை பெ. 1. பாய்மரத்தின் அடிப்பாகம். (செ. ப. அக.அனு.) 2. புல், மரம் போன்றவற்றின் அடிப் பகுதி. (நாட். ல.) 3. பின்னால் சரிபார்ப்பதற்கு வைத்திருக்கும்) இரசீதுகளின் இணைப்படி. இரசீது எண் 7 அடிக்கட்டை எடு (நட்.வ.).

அடிக்கடி1 பெ. ஓரடி எடுத்து வைத்த பின்னர் வைக்கும் மற்றோர் அடி. அடிக்கடி படித்துகள் பரவை தூர்த்தன (பாரதம். 7, 4, 201). அனைவரும் உணர்தல் தேற்றா அடிக்கடி தீர்த்தம் ஆகும் (திருக்காளத். பு. 7, 50).

அடிக்கடி2 வி. அ. 1. திரும்பத் திரும்ப. அண்ணல் சாமந்தன் துஞ்சான் அடிக்கடி எழுந்து (திருவிளை. பு. 30, 20). அடிக்கடி...பவதி பிட்சாந்தேகி எனும் பனவப் பேய் (கலிங். 566). மழைக்குலம் அடிக்கடி விழிப்ப போல (சீறாப்பு. 1,2,2). அடிக்கடி என் அகத்தினிலும் புறத்தினிலும்...அருள்கின்ற பொரு ளே (திருவருட்பா 4113). என் தாயார் எனக்கு அடிக்கடி புத்திசொல்லி வருவார்கள் (பிரதாப. ப. 11). அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல் (பாரதி. ஞானப். 22, 9). அருமை மதனி அடிக்கடி அடிக்கடி சடைவாருதற்குத் தாய்வீட்டை வாள் (நாஞ். மரு. மான். 4, 53-54).

அடிக்கடிக்கு வி.அ அடிக்கடி2. (சென்னை வ.)