உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

அயல்

எழு. 62).ஆர் உறவு எனக்கு இங்கு ஆர் அயல் உள் ளார் (திருவாச. 22,8). 4. பிற, மற்று. அயல் உருக் கோடலும் (மணிமே. 23,98). அவ்வகை கூறாள் அயல் ஒருத்தி (குலோத். உலா 280). 5. வேறுபாடு. அயல் ஒன்று இன்மை போலவும் (ஞானா. 18,38).

அயல் பெ. காரம். அயல் கொளுத்துகிறது (செ. ப.

அக.).

அயல்" இ.சொ. ஏழாம் வேற்றுமை உருபுகளுள் ஒன்று. உறையூர்க்கயல் நின்ற சிராப்பள்ளி (தொல். சொல். 82. சேனா.).

அயல்" - தல் 3 வி. காரம் உறைத்தல். குழம்பு அயலு கிறது (செ.ப. அக.).

அயல்காற்று பெ. வேற்று மனிதர் வாடை. (ரா. வட். அக.)

அயல்நாடு பெ. வேற்று நாடு. (ஆட்சி. அக.)

அயல்மணமுரை-த்தல் 11 வி. தலைமகற்குத்

தோழி

படைத்து மொழிந்து பிறரும் மணம் வேண்டிக் காப் பணியக் கருதுவரென்று கூறும் அகத்துறை. (களவி, காரிகை 476)

அயல்மனை பெ. 1. அடுத்த வீடு. அயல் மனையார் தங்குழவி (குசே. 75). 2. பிற ஆடவன். தங்கிருட் போதிற் றலைச்சென்று அயன்மனை அங்கு மகிழ்ந் தாள் (சூளா. 1933).

அயலகம் பெ. அடுத்தவீடு. (செ. ப. அக.)

அயலத்தான் பெ. 1. அடுத்துள்ளவன். (செ.ப.அக. அனு.) 2. அன்னியன். (முன்.)

அயலதை பெ. அயல் இடத்தது. அயலதை அலராயின் (கலித். 28,13).

அயலவர்

பெ. 1. பக்கத்திலுள்ளோர். அயலவர் சிரிச்சுற்றுப் பல பேசப்படாமுனம் (தேவா. 5,1,3). 2.மாறுபட்டவர். ஆத்தமானார் அயலவர்கூடி (திருவாச. 4, 46). 3. பகையும் நட்புமில்லாதவர். (சங்.

அக.)

அயலவன் பெ. 1. பக்கத்தான். (கதிரை. அக.) 2. அன் னியன். (செ. ப. அக.)

அயலறு-தல் 4வி / 6வி. பேதம் இன்றி யிருத்தல். அகம் கோடிகண்டு உள் அயலறக் காண்பர்கள் (திருமந்.

759).

அயலூர்

அயலன் பெ. அன்னியன். பிரமகோத்திரக் கயல் னாகியே (சேதுபு. பாவநா. 17).

அயலாசாரம் பெ. அக்கம் பக்கத்தார்க்கு ஏற்ற ஒழுக் கம். இப்படிக் கள் குடிப்பது அயலாசாரத்திற்கு ஒத்துவாராது (பே.வ.).

அயலாதாரம் பெ. (இலக்.) ஏழாம்

வேற்றுமையில்

வரும் நான்கு வகை ஆதார காரகங்களுள் ஒன்று.

சேர்வாதாரம் கலப்பாதாரம் புலனாதாரம் அய லாதாரம் என (வீரசோ. 41 உரை).

அயலாயிரு-த்தல்

12 வி. நான் செய்தேன்

அகங்காரம் இன்றிச் சான்றாயிருத்தல்.

என்னும்

ஈயுந்தோ

றெல்லாம் தான் அயலாயிருத்தல் (பதிற்றுப்.61,12

உரை).

அயலார்-தல் 4 வி. அடுத்திருத்தல். அங்கண் இருமருங் கும் மன்னர் அயலார (பாரதவெண். 29).

அயலார்காட்சி பெ. நேர்நின்று பார்த்த பிறர் கூறும் சான்று. ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று (பெரியபு. தடுத்தாட்.56).

அயலாள் பெ. அன்னியமானவன். இங்கு அயலாளை வர விடாதே (பே.வ.).

14).ஆர்

அயலான் பெ. 1.பக்கத்தவன், தொடர்பில்லாதவன், அன்னியன். சொல்லும் அயலார் துடிப்பளவே (ஐயடிகள். சேத். 14). ஆர் உற்றார் ஆர் அயலார் (திருவாச. 7,10). அயலார் வரைந்து புகும் கால மேல் மாயினும் (இறை. அக. 29 உரை). அயலார் வைத்துத் தலைமகள் கூறியது (குறள். 1217 மணக்.). 2. பகைவன். அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் (கம்பரா. காப்பு 2).

அயலி' பெ. வெண்கடுகு. (பச்சிலை. அக.)

அயலி' பெ. சிற்றரத்தை. (முன்.)

அயலிலாட்டி பெ. அடுத்த வீட்டுப் பெண். அமுதம் உண்க நம் அயலிலாட்டி (நற். 65, 1).

கயல்

புரை

அயலுரை பெ. இயைபில்லாத பேச்சு. கண்ணியை அயலுரை உரைத்தது (திருக்கோ. 137 கொளு).

அயலூர் பெ. வேற்றூர். அயலூர் அவன் போக அம் மஞ்சளாடி (அறநெறிச். 163). அயலூர்க் குளத்திலே