உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சுதன்

அச்சுதன் பெ. 1. திருமால், கண்ணன். அடி கண்டி லேன் என்று அச்சுதன் சொல்ல (திருமந். 88). அத்தத் தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் (பெரியாழ். தி.1,2,6). அண்ணலை அச்சுதனை அனந்தனை (திருவாய். 3, 4,9). அச்சுதா,அமரர் ஏறே (தொண்டரடி. திருமாலை 2). அரவணைத் துயில் அச்சுதன் (திருப்பு. 337). கவித்தலத்து அமரும் அச்சுதன் (வரத. பாகவ. 1, 62). 2. அருகன். முழுமதி முக்குடை அச்சு தன் அடிதொழுது (நன். 258). 3. அழிவில்லாதவன். அச்சுதனாம் சிவன் (கந்தபு. 3,12,8). அச்சுதன் அனந்தன் என்று அருமறைக்குலம் கழறுமால் (செ. பாகவத. 11, 18, 43). 4. சிவன். அச்சுதன் மூதிறை (பொதி. நி.2,22).5. முருகன். அச்சுதன்... அரியும் மருகனும் (பொதி.நி. 2,22).

...

அச்சுதன் முன்னோன் பெ. கண்ணனின் தமையனான பலராமன். அச்சு தன் முன்னோன்

பெயரே (பிங். 143).

...

பலபத்திரன்

அச்சுதை பெ. பார்வதி. பகவதி சம்பவை மகிடவா கினி அச்சுதை (கூர்மபு. பூருவ.12,23).

அச்சுப்படி பெ. அச்சடிக்கப்பட்ட நூற் பிரதி அச்சுப் படிகளைக்கண்டு வியப்படையாமல்

ஆத்திரப்பட்டார்கள் (அச்சுக்கலை ப. 89).

அவர்கள்

அச்சுப்பலகை பெ. தறியில் அச்சு அசையாமல் இருப் பதற்குப் பொருத்தும் சட்டம் (தொ.வ.)

அச்சுப்பிரதி பெ. அச்சுப்படி. (அச்சுக்கலை ப. 90)

அச்சுப்பிழை பெ. எழுத்துக்களை அச்சுக் கோத்துப்படி யெடுத்தபின் அதில் காணப்படும் தவறு. இது அச்சுப் பிழைதிருத்துவோர் (முன். ப. 174).

...

அச்சுப்பூட்டியிழு-த்தல் 11 வி. தறியூடு நூலைச் செலுத்து

தல். (வின்.)

அச்சுப்பூட்டி விளையாடு-தல்

5வி. பந்து, புளியங்

விளையாடுதல்.

கொட்டை முதலியன கொண்டு

(ராட். அக.)

.

அச்சுப்பொறி பெ. அச்சடிக்கும் இயந்திரம். பலவகை யான அச்சுப் பொறிகளையும் (அச்சுக்கலை ப.199).

அச்சு மரம் பெ. வண்டியின் சக்கரங்கள் கோக்கப்படும் மரம். அச்சுமரத்தின் மேலே நெடியவாய் இரண்டு

7

1

அச்சுவதரம்1

பக்கத்தும் (பெரும்பாண். 48 நச்.). அச்சுமரம் இற் றுப் புரவி கயிறுருவிப் போச்சோ (தனிப்பாடல்).

அச்சுமை பெ. நூல் அச்சிடுவதற்குப் பயன்படும் எண்ணெயால் தயாரிக்கப்பட்ட அச்சு மை கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் (அச்சுக்கலை ப. 31).

மை.

அச்சுயந்திரசாலை பெ. நூல் முதலியன அச்சிடுமிடம். (நாட். வ.)

அச்சுயந்திரம் பெ. அச்சடிக்கும் பொறி. (அச்சுக்கலை

ப. 91)

அச்சுரம்1 பெ. நெருஞ்சில் செடி. (பச்சிலை. அக.)

அச்சுரம் 2 பெ. முருங்கைமரம். (வின்.)

அச்சுருவாணி (அஞ்சுருவாணி)

பெ. தேரின் ஐந்து

தட்டுக்களையும் நிலைநிறுத்தும் பொருட்டு நடுவே ஊடுருவிச் செல்லும் அச்சாணி. அச்சே தேரின் அச் சுருவாணி (பிங். 1488).

அச்சுலக்கை பெ. (நீரிறைக்கும்) துலாவைத் தாங்கும் நடுக்கட்டை. (வின்.)

அச்சுவசாத்திரம் (அசுவசாத்திரம்) பெ. குதிரையின் உடற்கூறு, நோய், மருத்துவம் முதலியவற்றைக் கூறும் நூல். (சங். அக.)

அச்சுவத்தம் பெ. 1. அரசமரம். அச்சுவத்தம் பிப் பிலம் அரசே (திவா. 620). பனை மரத்தின் அச்சு வத்தம் அதிகம் (ஆப்பனூர்ப்பு. மூர்த்தி. 17). 2. கல்லால் என்னும் இச்சி (இத்தி) மரம். அச்சுவத்தம் கல்லால் (நாநார்த்த. 137).

...

அச்சுவத்தாமன் (அச்சுவத்தாமா, அசுவத்தாமன், அசுவத்தாமா) பெ. (காப்.) துரோணாசாரியாரின் மகன். தணிந்தான் அணுகினான் அச்சுவத்தாமன் (நல். பாரத. பாசறை. 58).

அச்சுவத்தாமா (அச்சுவத்தாமன், அசுவத்தாமன், அசுவத்தாமா ) பெ. (காப்.) துரோணாசாரியரின் மகன். துரோணாசாரியனைக்கொன்ற சிகண்டியை கொன்று தலையைத் திருகும் அச்சுவத்தா மாவை (கலித். 101, 32 நச்.). அச்சுவத்தாமா என் னும் மத்தவாரணம் (பாரதம். 7,5,27).

...

அச்சுவதரம்1 பெ. கோவேறு கழுதை. (நாநார்த்த.

130)

.