உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுகரி-த்தல்

அனுகரி-த்தல்

11 வி. ஒருவரைப் பின்பற்றி அவர் போல் நடத்தல். தானும் அவர்களைப் போலே அனுகரித்துத் தரிக்கப் பார்க்கிறாள் (திருப்பா. அவதா.

ப. 3).

அனுகவீனன் பெ. இடையன். (கதிரை. அக.)

அனுகற்பம் பெ. மேய்ச்சல் நிலத்திலிருந்தெடுத்த பசு வின் சாணத்தைக் கொண்டு முறைப்படி உண்டாக்கிய திருநீறு.நெருப்பில் இட்டுச் சீரணியும்படி வெந்து கொண்ட செல்வத் திருநீறாம் அனுகற்பம் (பெரியபு. 63, 3). இனி

அனுகற்பந்தனையும் கூறுவம்

(சைவ. நெறி பொது. 179).

அனுகன் 1

...

பெ. பின்பற்றுபவன். (நாநார்த்த. 426)

அனுகன்' பெ. இன்பவேட்கையுடையோன், காமுகன்.

(முன்.)

அனுகன் 3

பெ.கணவன். (த. த. அக.)

அனுகன்' பெ.

வேலைக்காரன். (முன்.)

அனுகாமி பெ. தோழன். (கதிரை. அக.)

அனுகாரம் பெ. ஒன்றைப் போலச் செய்கை. திருவாய்ப் பாடியிலே குடிபோய் ... அனுகாரம் முற்றி (திருப்பா.

அவதா. ப. 4).

அனுகுணம் பெ. ஏற்றதாயிருக்கை. அறைதரும் மிருதி யெல்லாம் அவைக்கு அனுகுணமாம் (திருவிளை. பு.

16, 41).

அனுகுணாலங்காரம் பெ. (அணி. ) ஒப்பிடப்படும் பொருள் ஒப்பிடும் பொருளின் தன்மையால் தனது இயற்கைக் குணம் மிகுவதாகக் கூறும் அணி, தன்குணமிகை யணி. (அணி. 78)

அனுகுலம் பெ. பொருத்தம், ஏற்றவகை.

அகங்

குழைந்து அனுகுலமாய் மெய்விதிர்த்து (திருவாசு.

4,67).

அனுகூலசத்துரு

பெ. அடுத்துக் கெடுக்கும் பகை அனுகூலசத்துருவான பூதனையை நிரசித்து (திரு QUE. 4, 3, 4 Leirof.). அனுகூலசத்துருவாகும் என் உள்ளம் (சர்வ. கீர்த். 58,2).

அனுகூலம் 1 பெ. 1. நன்மை. அனுகூல காலங்கள் முனிவர்க்குப் பிறக்க (இராமநா. 1,11 தரு, 1). எல் லாம் அனுகூலமாய் முடிந்தது (பே.வ.). 2. (ஒன்று நிறைவேறுவதற்கு) உறுதுணை, உதவி. அனுகூலமாய்

5.

49

அனுங்கு-தல்

சங்கரன் ஆணை (சிவப்பிர.விகா. 126). 3. நன்மை யாய் நிறைவு பெறுகை. (செ. ப. அக.)

அனுகூலம்' பெ. ஒப்புதல். (கதிரை. அக.)

குருக்களுக்கு

அனுகூலன் பெ. 1. உதவிசெய்பவன்,நன்மை செய்பவன். அனுகூலராய்ச் செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் (பெரியா ழ்.தி. 4, 4, 2). 2. இதமாக நடப்பவன். (த.த.அக.)

அனுகூலி-த்தல் 11 வி. 1.பயன்படுதல், நன்மை உடையதாதல். (சங். அக.) 2. உதவிசெய்தல். நீங்கள் அனுகூலித்தால் எல்லாம் சரியாகமுடியும் (பே.வ.).

3.

குணமாதல். வியாதி அனுகூலித்து வருகிறது

(செ. ப. அக.).

அனுகூலி' பெ. துணையாயிருப்பவன்(ள்). ஏவலுக்கு எளியவன் நான் அனுகூலி (இராமநா. 3, 4 தரு, 1). இம்மை அம்மைக்கு அனுகூலியாகி இருக்கும் இலக் குமி (குணசீலத். பு. குணசீலர். 4).

அனுங்கல் பெ. வாட்டம். தேம்பலுங் குழைதலும் அனுங்கலும் வாட்டம் எனலாகும் (பிங். 1922).

...

அனுங்கியடிக்கை பெ. ஒரு விளையாட்டு. (கதிரை. அக.)

அனுங்கு-தல் 5வி. 1. வருந்துதல். அருமணி நாகம் அனுங்க (கார்நாற். 20). நிறை அணி நெஞ்சு அனுங்க நீலமால் விடம் உண்டது (தேவா. 7,99, 1). அனுங்க என்னைப் பிரிவு செய்து (நாச்சி. தி. 14,2). பிலம்புரை பேழ்வாய் வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி (தொண்டரடி. திருப் பள்ளி. 2). மருங்கில் கொங்கை கொண்டு அனுங்கும் கொடி இடை (கருவூர். திருவிசை. 6,10). உள்ளம் நொந்து அனுங்கி வெய்ய கூற்றமும் உறுவது உன்ன (கம்பரா. 5, 10, 17). பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பு ஆர் அடிப்பாவை (சூளா. 6). அரவின் வாய் விடத்திற்கு அனுங்கி (கலைமகள் பிள். 79). 2. வாடு தல். பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க (கம்பரா. 3, 5,31). 3. துன்புறுதல். முதலையின் வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி (தொண்டரடி. திருப்பள்ளி. 2). 4. குலைதல், கெடுதல். வாட்படை அனுங்கவேடர் வண்சிலை வளைய (சீவக. 436). அனுங்க என்னைப் பிரிவு செய்து (நாச்சி. தி. 14, 2). கிரியினை விண் தொட எடுத் தனன் உலகெலாம் அனுங்க (கம்பரா. 6, 5, 53). அனுங்கு-தல் 5 வி. பின்வாங்குதல். அங்கதாதியர் அனுங்க வெங் கணைகள் சிந்தினான் (கம்பரா.

6, 18, 62).

...

...