உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுப்படியிறக்கு-தல்

அனுப்படியிறக்கு-தல்

5 ai. பழைய பாக்கியைப்புதுக்

கணக்கிற்குக் கொண்டுவருதல். (செ.ப. அக.)

அனுப்பன் பெ. கவுண்டர் இனத்தாருள் ஒரு பிரிவார். (முன்.)

அனுப்பிரவிட்டன் பெ. உள்ளே நீக்கமற நிறைந்து நிற்பவன். (செ.ப. அக. அனு.)

அனுப்பிரவேசம் பெ. ஒருவரை முதலில் போகவிட்டுப் பின்னர்த் தொடர்கை. (செ.ப. அக.)

அனுப்பிராசம் பெ. (யாப்.) ஒரு செய்யுளில் நான்கடி களின் முதற் சீரில் மட்டுமன்றிப் பிற சீர்களிலும் வரும் எதுகை, வழியெதுகை. அனுப்பிராசம் என்னும் வடமொழியை அனு என்பதும் வழி எதுகை என் பதும் தமிழ் வழக்கெனக் கொள்க (யாப்.வி.53 உரை). பரதர் கூறிய நான்கு அலங்காரங்களுடன் ஐந்தாவதாக அனுப்பிராசம் என்பதைப் பாமகர்... சேர்த்திருக்கிறார் (இந்திய. கலை ப . 22-23).

அனுப்பினுட்சுவை பெ. உப்பு. (கதிரை. அக.)

அனுப்பீடு பெ. ஒப்படைக்கப்பட்ட பொருள். (கலை. அக.

2 ப.75)

அனுப்பு-தல் 5வி 1. (ஒருவரை ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப்) போகச்செய் தல், சேர்த்தல். திண்புயமதிற் புனைந்து எனை அனுப்பிடில் (பெருந். 1792). எனைச் சோழநாட் டுக்கு அனுப்பவேணும் (தமிழ்நா. 254). அங்கே யிருந்து சட்டியில் கறியும் சோறும் அனுப்பினான் (முக்கூடற். 96). வானவர்தமை அவர் நிலைதொறும் அனுப்பி (திருநெல். பு. விந்தகிரி. 58). கட்டுக்கட்டாய்க் காய்கறி அனுப்பவும் (நாஞ். மரு. மான், 9, 194). இறசூல் அனுப்பும் ஓலை (சின்ன (சின்ன சீறா. 49). தடியா யுதனை அனுப்பும் ஐயா (தோத்திரத்திர. மகா சாத். 2). 2. (பிரிந்து செல்வோருக்கு)விடைகொடுத்தல், வழியனுப்புதல். அவரை அனுப்பிவிட்டு வருகிறேன்

(பே.வ.).

...

அனுப்பு' பெ.

போசுவிடுக்கை.

மேளக்காரருக்கு

அனுப்புக் கொடுக்கவேண்டும் (நாட்.வ.).

அனுப்பு' பெ. ஒரு பழைய வரிவகை. (சென்னை. கல்.

அறி. 427, 1928-1929).

அனுப்பு பெ. உதவியாக உப்புடன் கலந்தது. (சாம்ப.

அக.)

55

4

அனுபந்தம் ே

அனுப்புக்கூலி பெ. மண முறிவு ஏற்பட்டபின் பெண்ணுக் குக் கொடுக்கும் பொருள். (தஞ். வ.)

அனுப்புக்கொடு-த்தல் 11 வி. மணவிழா

முதலான

சிறப்புக்களில் பணியாளருக்கு உரிய சன்மானம் கொடுத்து அனுப்புகை. (பே.வ.)

அனுப்புச்சரக்கு பெ. ஒருவனுக்கு

அனுப்பப்படும்

பொருள். (வணிகவரித். க. சொ.)

அனுப்புநர் பெ. கடிதம் முதலியவற்றை அனுப்புகிறவர்.

(புதிய வ.)

அனுப்புவி-த்தல் 11 வி.

போக்குவித்தல்.

பித்தர்

இறை என்று அறிந்து பேதைபால் தூது அனுப்பு வித்த தமிழ்ச்சமர்த்தர் (தாயுமா. 45,3).

அனுபந்தசதுட்டயம்

பெ. இலக்கியத்தில் கூறப்படும்

பொருள் (விடயம்), சம்பந்தம், பயன், கற்றற்குரி யோன் (அதிகாரி) ஆகிய நால்வகைப் பொருள். (வேதா. சூ.5)

அனுபந்தம் 1 பெ. 1. உதவி.

பந்தம் செய்யுமவர்களும்

அவர்களுக்கு அனு (திருவாங்.கல். 3,195).

2. (இக்) விடுபட்ட செய்திகள் அல்லது பிற துணைச் செய்திகளின் இணைப்பு, பிற்சேர்க்கை, பின்னிணைப்பு. (செய்தி வ.) 3. (சைவ சித்.) ஆணவமலம் தேய்வதற் காகச் சேர்க்கப்பட்ட மாயைகன்மம். உருவருவென்ற உடம்புடன் ஒருவ இரண்டனுபந்தமும் இருண் மலபந்தமும் (சிவதரு. 10,2). 4. இடையே தொடர்ந்து விருப்பு வெறுப்புக்களை உண்டு பண்ணிச் சுகதுக்கம் தருவது. (சருவஞா. 4 உரை) 5. உறவு. (செ.ப. அக.) 6. (அறிவி.) உடலின் சில பகுதியோடு சேர்ந்துள்ள வேறு சிறு பகுதி. குடல் அனுபந்தம் (இயற்கை. க. அக.ப. 42).

அனுபந்தம்' பெ. தடை. (சங். அக.)

அனுபந்தம்' பெ. பிழையின்

435)

தோற்றம். (நாநார்த்த.

அனுபந்தம்' பெ. பகுதி விகுதியிடையே தொக்க எழுத்து.

(முன்.)

அனுபந்தம்' பெ. பாவம். (கதிரை. அக.)

அனுபந்தம் பெ. ஒற்றுமை. (முன்.)