உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபவி

தாலன்றிச் செய்த கருமங்கள் விடா (கைவல்ய. சந்தே. 49). 3. இறையனுபவம் உணர்தல். பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்தவர் (அமலனாதி. 1 அழ.). 4. உரிமையாகப் பயன்படுத்திக்கொள்ளுதல். தங்கள் வர்க்கத்தாரும் அனுபவிக்கவும் (தெ. இ. க.8,99). நம்மாழ்வார். பேற்றை அனுபவிக்க ஆசைப்படுகிறார் (பெருமாள்தி. அவ.).

அனுபவி' பெ. 1. (தத்துவம்) ஆன்ம இன்பம் துய்ப் பவன். உலக விவகாரம் நினையாமல் விவேகம் மேவி ஓர் பிறப்பினான் முத்தன் அனுபவியே (வேதா.சூ. 12). 2. வாழ்க்கையில் அனுபவம் பெற்ற

வன். (பே.வ.)

பெ. (திருப்பு. 745),

அனுபவை

பார்வதி. அனுபவை பராசக்தி

அனுபாகம் பெ. அவரவருக்குரிய பாகம். (கதிரை. அக.)

அனுபாடணம் பெ. ஒன்று கூறவேண்டிய இடத்தில் மற்றொன்றைக் கூறுகை. ஆயாமம் அறைபொழு தில் அறைந்த அனுபாடணத்தால் (சிவதரு.10, 75).

அனுபாதகம் பெ. பெருங் குற்றம். (கதிரை. அக.)

அனுபாதம் பெ.கணக்கு வகை. (செ. ப. அக. அனு.)

அனுபாயம் பெ. தகுந்தவழி (உபாயம்) அல்லாதது.

(வைண. ப. 108)

அனுபாலனம் பெ. பாதுகாப்பு. (மதுரை. அக.)

அனுபாவம்' பெ. அருள். தேவி தன் அனுபாவத்தால் (தேவிமான்.1, 1).

அனுபாவம்' பெ. மேற்கொண்ட உறுதி. (நாநார்த்த. 435)

அனுபாவம்' பெ. அபிநயம். (முன்.)

அனுபாவம் + பெ. உள்ளத்து உணர்வுகளை மெய்ப்பாட் டால் பிறருக்கு உணர்த்துவது. அனுபாவங்களால் உணர்த்தப்படும் உணர்வுகளுக்குப் பாவம் என்று பெயரைச் சுட்டுகிறார் பரதர் (இந்திய. கலை ப. 42).

அனுபாவியம் பெ. நுகர்ச்சி. தன் பக்கல் உள்ளது எல்லாம் அனுபாவியமாய் இருப்பான் (பெரியதி. 2,7,1 தமிழாக்.)

5

56

அனுபோகம்1

அனுபானம் பெ. உட்கொள்ளும் மருந்தைக் குழைத்துக் கொடுப்பதற்குரிய தேன், நெய் முதலிய பொருள்கள். நலமான சூதத்தில் அனுபானம் கொள்ளே (போக. செனன. 541). அனுபானம் அறிந்துகொண்டால் சூலை பதினெட்டும் போகும் (போகர் 700. 94).

...

அனுபூதம் பெ. மனம் ஒரு பொருளை அனுபவிக்கை. அனுபூத விடயம் (சிவப்பிர.விகா. 301).

அனுபூதி பெ. 1. தெய்வ அருளை அனுபவித்த பெருமித நிலை. முத்திராந்தத்து அனுபூதியே (திருமந்.2483). 2. அனுபவத்தில் பரம்பொருளை உள்ளத்தே அறிந்து தோய்கை. ஈனமில் ஞானானுபூதியில் இன்பமும் (திருமந். 1481). ஆசாநிகளம் துகள் ஆயின பின் பேசா அனுபூதி பிறந்தது (கந்தரனு. 43). மன்னும் அனுபூதி... மாணிக்கத்துள்ளொளி போல் (பட்டினத் தார். அருட்பு. மகடூஉ. 78). உணர்வரிய பேரின்ப அனுபூதி உணர்விலே (தாயுமா. 9, 1). சிவானந்தானு பூதியைத் திளைத்திருப்பதே முத்தி (சிவதரு. 1, 17, உரை). 3. தெய்வ அருளனுபவத்தை உரைப்பதாகிய நூல். கந்தர் அனுபூதி சொன்ன எந்தை (தாயுமா.

45, 3).

அனுபூதிகம் பெ. அனுபவம். உரையில் அனுபூதிகத் தின் உள்ளானே (திருமந். 2940).

அனுபூதிவிளக்கம் பெ. (சிற்றம்பலநாடி மாணாக்கர் செய்ததாகக்கருதத்தகும் 62 கண்ணிகள் கொண்ட) சைவசித்தாந்த சாத்திர நூல். (மு.அ. தமிழ் இலக். வர. 14 நூற்.ப. 191).

அனுபை (அனுபமை2) பெ. தென்மேற்குத் திக்குக் குரிய யானையின் பெண்யானை. (அபி. சிந்.)

அனுபோகசாலி பெ.

அனுபவசாலி. (செ. ப. அக.)

அனுபோகப்பற்றொழுகு பெ. சொத்துக்குரிய மூலபத் திரங்களைப் புதுப்பிக்கை. (சென்னை. கல். அறி. 213,

1925)

அனுபோகம்1 பெ. 1. இன்பநுகர்ச்சி. சிவமாதுடனே அனுபோகமதாய் (திருப்பு. 673). 2. நுகர வேண் டிய வினைப்பயன். அனுபோகம் தொலைந்தவுடன் சித்தியாம்வேறும் உள அவிழ்தம் (தண்டலை. சத. 89). அனுபோகம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும் (பழ. அக. 843). 3. பயன்படுத்திக்கொள்ளும் உரிமை, கையாட்சி, சுவாதீனம். இம்மன்னனார் திருநாமத்துக் காணியாக அனுபோகம் எழுதித் திருமாளிகையிலே கல்லுவெட்டுவிப்பதாகவும் (தெ.இ.க.12,254),