உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டிரன்2

அண்டிரன்' (அண்டீரன்) பெ. 1.மனிதன். (யாழ். அக.அனு.) 2. வீரன். (சங். அக.)

அண்டில்

(அண்டுப்புழு) பெ. மாடு முதலியவற்றின் கண்ணிற் பற்றும் கிருமி. (சங். அக.)

அண்டினவன் பெ. நம்பிச் சேர்ந்தவன். உற்றார் கன்மத்தால் அண்டினவர் (தென். திருவாய். நூற். 81). அண்டினவனை ஆதரிக்கவேண்டும் (பே.வ.).

அண்டீரன் (அண்டிரன்2) பெ. 1. மனிதன். அண் டீரன் மனுடன் வீரன் (நாநார்த்த. 299).2. வீரன். அண்டீரன் மனுடன் வீரன் (மூன்.)

அண்டு-தல் 5 வி. 1. கிட்டுதல். கடுமாப் புலி ஒன்று அண்டல் (மணிமே. 27, 69-70). ஒளியாய் நின்றது ஆர் அண்டத் தக்கார் (திருமந்.1991). அண்டி னன் சேர்தலும் (கந்தபு. 6,8, 45). 2. பொருந்து தல், சேர்தல். அண்டாதே வேல்வழி வெம்முனை வீழாது (சிறுபஞ். 13). உருவமற்ற ஞானம் ஆகார மாம் உவமைக்கு அண்டாது என்னும் மூகர் (ஞானவா. முமுட்சு. 27). 3.ஆதரவு பெறச்சேர்தல். பேய்மனதை அண்டியே தாய்இலாப் பிள்ளை போல் (தாயுமா. 11, 1). அண்டும் வேதநாயகன் அகத்து ஒளிர்சோதியே (சர்வ. கீர்த். 57,3). நல்ல வரை அண்டினால் வாழலாம் (நாட்.வ.). 4. ஒதுங்குதல். அண்ட நிழலில்லாமல் போனா லும் பெயர் ஆலவிருட்சம் (பழ அக. 146). 5. அழுந்துதல். (கதிரை. அக.)

அண்டு2 பெ. மணிவடம் முதலியவற்றின் உரு.நாலு அண்டு அந்தச் சங்கிலிக்கு இன்னும் வேணும் (செ.ப.அக.).

அண்டுகம் பெ. ஒரு பறவை. (சாம்ப. அக.)

அண்டுதள்ளுகை (அண்டிதள்ளுகை) பெ. 1. மல் வாயிற்சதை வெளிவருவதாகிய நோய், மூலநோய். (செ.ப.அக.) 2. கருவாயின் உள்ளுள்ள சதை வெளி வருவதாகிய நோய். (சாம்ப. அக.)

அண்டுப்புழு (அண்டில்) பெ. மாடு முதலியவற்றின் கண்ணில் பற்றும் கிருமி. (செ. ப . அக.)

அண்டுபடு-தல் 6 வி. 1. பொருந்துதல். அண்டுபடு சீர் இது அன்று ஆதலால் (மீனா. பிள். 7, 1). 2. பிடிபடும் அருகில் இருத்தல். (நாட்.வ.)

1

59

அண்டையயல்

அண்டை1 Qu. 1. (ஒரு பொருளின்) பக்கம். இலவத்து அண்டை சார்ந் தவனை (பெருங். 1,55, 132). கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் (முக்கூடற் 19). அண்டைவீட்டார் சண்டை (செய்தி. வ.). 2. அருகு. அண்டையில் அகலா திருக்க ஒருத்தி (நாஞ். மரு.மான். 1, 39). 3. வரப்பு ஓரம். அண்டை கொண்டு கெண்டைமேயும்... அரங்கமே (திருமழிசை. திருச்சந்த. 49). அண்டை கழித்து விடு (தொ. வ.). 4. ஒட்டு சீலைக்கு அண்டை வைத்துத் தைத்தான் (செ. ப. அக.) 5. முட்டு. சுவர் சாயாதபடி அண்டை கொடு (நாட் .வ.).

அண்டை2 பெ. நீர் தூவுங் கருவி. வெண் பொன் அண்டை கொண்டு ... மாறி ஆட (திருவிளை. பு. 11, 24). அண்டை கொடு குங்குமம் இறைப்பார் (சீவல. கதை 36).

அண்டை

இ.சொ. இடவேற்றுமைச் சொல்லுருபு. ஊரண்டை கோயில் இருக்கிறது (நாட். வ).

அண்டைக்கட்டிச்சுரம் பெ. காயம் முதலியவற்றால் அக் குள், கவட்டி ஆகிய பகுதியில் நெறிகட்டி ஏற்படும் காய்ச்சல். (சாம்ப. அக.)

அண்டைகட்டு-தல் 5 வி. 1. புண் வீக்கம் முதலியவற் றால் அக்குளிலும், கவட்டியிலும் நெறிகட்டுதல். அண் டைகட்டிக்கொண்டதால் வேகமாக நடக்கமுடிய வில்லை (தஞ்.வ.). 2. (செடிகட்கு) மண் அணைத் தல். (தொ.வ.)

அண்டைகழி-த்தல்

11 வி. (வயல் வரப்புக்களை) வெட்டிச்சீராக்குதல். நாளைக்கு அடுத்த வயலில் அண்டை கழிக்க வேண்டும் (பே.வ.).

அண்டைகொள்(ளு)-தல் 2 வி. பக்கத்துணை கொள் ளுதல். திருநாமத்தை அண்டை கொண்ட பலத்

தாலே யமன் வாசலிலே

(தொண்டரடி. திருமாலை 1 வியாக்.).

அண்டைநாடு பெ. பக்கத்து நாடு.

அறைகூவுகிறார்

அண்டை நாடுக

ளுடன் வாணிகத்தொடர்பு நன்கு வளர்ந்து வருகி

றது (செய்தி.வ.).

அண்டைபோடு - தல் 6 வி. ஒட்டுப்போடுதல். (நாட் .வ.)

அண்டையயல் பெ.

அக்கம்பக்கம். அண்டையயல் வீட்டு ஆடுமாடுகள் வேலியைச் சாய்த்துவிடும்

(நாட். வ.).