உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. நூற்பதிப்புக் கழகப்பெருமை

("எதிரே செல்கிறாரே அவர் கோடி கோடியாகத் தேடி வைத்துள் செல்வர். ஆனால், நான் மனப்பாடம் செய்துள்ள இலக்கியச் செல்வத்திற்கு இணையாகுமா அவர் செல்வம்?”

“புல்லைக் காட்டிக்கொண்டு போகின்றவனைத் தொடரும் ஆவைப்போல், நூலைத் தொகுத்து வைத்திருப்பானைத் தேடி நான் போகின்றேன்”).

சுவைஞர் இருவர் சொன்மொழி.

"பொருள் இல்லார்க்கு இவ் வுலகம் இல்லை" - உண்மை தான். "பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும், பொருளல்ல தில்லை பொருள்' - இதுவும் உண்மைதான். பொருளினால் ஆகும் எல்லாம் என்பதற்காக அப் பொருளை எப்படியும் தேடுவது தகுமா? தக்கவர்களுக்குத் தகுமா?

பொருள் தேடுதற்குரிய வாயில்களுள் தலையாயது வாணிகம். ஆனால், எல்லா வாணிகங்களும் செய்யத்தக்கனவே எனினும் சான்றோர் உள்ளம் அவற்றில் ஈடுபடுவது இல்லை. மாசு மறுவற்ற பெருமை தருவதுடன் மதிக்கத்தக்க பயனையும் நாட்டுக்குத் தருவதாகத் தம் வாணிகக் கடமை இருப்பது நலமென் அன்னோர் எண்ணி ஈடுபடுவர். பொருள் ஒன்றே அவர்கள் பொருட்டாக எண்ணி ஈடுபடாத வணிகநெறி அது. கொள்ளையோ கொள்ளை என்று கூறுமாறு எத்தனை எத்தனை வணிகப் பகற்கொள்ளைகள், எத்தனைஎத்தனை கலப்படங்கள், கையூட்டுகள், கள்ளச் சந்தைகள், கடத்தல்கள், பதுக்கல்கள் இவையெல்லாம் ஒரு சிறிதும் இல்லாத வணிகமும் உண்டோ? உண்டு என்பதும் உண்மையே!

சங்கச்சான்றோர் கூறியதுபோலக் கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறைகொடாத அறவிலி வாணிகமே ஒருவர் புரியினும், அவர் எடுத்துக்கொண்ட வாணிகத்தைப் பொறுத்து அவர்தம் உளப்பான்மை வெளிப்படுமாம். உயிர் காக்கும் உணவுவகை, மானங்காக்கும் உடைவகை, உற்றவகையில்