உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமரோசை

அமரோசை பெ. இசையில் இறக்கமான சுருதியொலி, அவரோகணம். அத்தகைமை ஆரோசை அமரோ சைகளின் அமைத்தார் (பெரியபு. 14, 24).

அமரோர் பெ. தேவர். சத்தியினை யேவி அமரோர் கள் சிறைமீள நடமிடுவோனே (திருப்பு. 752).

அமல் (லு)-தல் 3 வி. 1. நெருங்குதல். நீர்இழி மருங்கின் ஆரிடத்து அமன்ற (அகநா. 272,7). முடந்தை நெல்லின் கழையமல் கழனி (பதிற்றுப். 32,13). ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்துப் பொய்கை (நற்.200, 6-7). வழை அமல் அடுக் கத்து (குறுந். 260). வேய் அமல் அகல் அறை

(கலித். 45, 1). அடுக்கு அமல் அத்திபுனை அலங்கார (பழமலை அந். 47). 2. சேர்தல். நஞ்சு அமல் அயினி நாகம் (ஞானா. 39,3). 3. மிகுதல், நிறைதல். அடும்பு அமல் அடைகரை (பதிற்றுப். 51. 7). உரைத்த வெண்ணெயும் நுரைப்பு அமல் அரைப் பும் (பெருங். 1, 41, 131). மைந்து அமல் நறுவிரைச் சந்தின் இன்சேறு (ஞானா. 41,13). கோடு அமல் மீட்டு மலர்ந்து (கச்சி. காஞ்சி. திருக்கண். 73). 4. பரவுதல். பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகை (அகநா. 136, 11). எங்கணும் தான் இனிது அமலும் (ஞானா. 21, 4).

அமல்' பெ. நிறைவு. (செ.ப.அக.)

அமல்' (அமில், அமுல்) பெ. 1. மேல் விசாரணை, அதிகாரம். அமலெல்லாம் செய்யறாண்டி (மலைய. ப. 128). 2. செயலுக்கு வருதல், நடைமுறை. புதிய ஆணை விரைவில் அமலுக்கு வரும் (செய்தி.வ.).

அமல்தார் பெ. 1. வரிதண்டும் அதிகாரி. (சங். அக.) 2. மேல் விசாரணைக்காரன்.

(செ.ப.அக.)

அமல்நாமா பெ. ஒரு வேலையைச் செய்யும்படி கொடுக் கும் அதிகாரப்பாத்திரம். (செ. ப. அக. அனு.)

அமலகம் 1 (அமலம்3) பெ. 1. நெல்லி. (பச்சிலை. அக.) 2. அருநெல்லி. (சித். அக./செ. ப. அக. அனு.)

அமலகம்' பெ. ஈரப்பலா. (மரஇன. தொ.)

அமலகம்' (அமலம்") பெ. கருவேம்பு. (முன்.)

அமலகமலம் பெ. கோமூத்திரம். (யாழ். அக. அனு.)

அமலகாண்டம் பெ. பூடுவகை. (சாம்ப. அக.)

276

அமலவாடிகம்

அமலசம்பீரம் பெ. எலுமிச்சை. (மரஇன. தொ.)

அமலசாகம் பெ. செடிவகை. (சாம்ப. அக.)

அமலசாரம் பெ. எலுமிச்சை. (முன்.)

அமலபனசம் பெ. ஈரப்பலா. (முன்.)

அமலம்' பெ. 1. மாசற்றது. அமலம் திருக்கூத்து அங்கு ஆம் இடம்தானே (திருமந். 895). அமலச் 895).அமலச் செங்கமல மலர் முகம் (திருமாளி. திருவிசை. 2,9). அமலத் தொல்பெயர் ஆயிரத்து ஆழியான் (கம்பரா. 3, 6, 15). அமலமாம் பொருளை யேற்று (கந்தபு.1,10,83.) அதுவே அழிவு படாததுவும் அமலமாயிருப்பதுவும் ஆம் (தக்க. 751 ப. உரை). தற் பரமாகி அமலமாய் நின்ற தலைவன் (செ.பாக வத. 1, 2, 12). 2. சிவம். பொதுவாகு மன்றின் அமலமே (திருமந். 894). 3. சிதம்பரம். அத்தன் பொதுவின் பெயர் மன்று அமலம் (கோயிற்பு.2,29). 4. அழுக்கின்மை. அமலம் அழுக்கின்மையும் (பிங்.3066)5. அறிவு. அமலம் அறிவும் (முன்.). 6. அழகு. அமலம் அழகும் ... (முன்.). கிடைகள் இருக்கு அமலம் மலர முறையியம்புவன (ஆனைக் காப்பு. கோச்செங். 37).

அமலம்' பெ. அப்பிரகம். (நாநார்த்த. 532)

.

...

...

அமலம்' (அமலகம்!) பெ. அருநெல்லி. (சித். அக. / செ. ப. அக. அனு.)

அமலம் + பெ. மரமஞ்சள். (வைத். விரி. அக. ப. 19)

அமலம்' (அமலகம்3) பெ. கருவேம்பு. (மரஇன.தொ.)

அமலமஞ்சள் பெ. மரமஞ்சள். (சித். அக.செ.ப.அக. அனு)

அமலர்' பெ. (மும்மலமும் நீங்கிய) ஞானி. அமலர் செய்தியும் அற்றால் மற்றே (ஞானா.73,18).

அமலர்' பெ. நெல்லி முள்ளி. (வைத். விரி. அக.ப.19) அமலருகம் பெ. வெற்றிலைவகை. (மரஇன. தொ.)

அமலவல்லி பெ. செடிவகை. (சாம்ப. அக.)

அமலவாடிகம் பெ. வெற்றிலைவகை. (மரஇன. தொ.)