உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

வந்தனர். அவர்கள் ஆசிரியர் பெயர் நல்லம்மையார். அவர் மிகவும் நல்லவர். பிள்ளைகள் அவரிடத்தில் அன்பால் இருந்தனர்” என நூல் தொடங்குகிறது.

'இப்போது ஆறாண்டுப் பிள்ளைகளுக்கெல்லாம் ஓட்டப் பந்தயம்" என்று நல்லம்மையார் குறிப்பிட்டார்.

“எனக்கு ஆறாண்டு அம்மா? நான் ஓடுவதைப் பாருங்கள் அம்மா" என்று தமிழரசி வேண்டினாள்.

“வயிரமணி! நீ ஐந்தாண்டு! நீ இந்தப் பரிசைப் பெற வேண்டும்; பார்க்கலாம்!” என்று அவள் அன்னையார் ஊக்கினார். வயிரமணிக்கே அந்தப் பந்தயத்தில் வெற்றி! அவள் பரிசு பெற்றாள்.

“தமிழரசிக்கு மட்டும் இரண்டு பரிசு" என்று சொல்லி நல்லம்மையார் அவளைப் பாராட்டினார்.

"தமிழரசியும், வயிரமணியும் கைகோத்துக்கொண்டு அன்னையுடன் பந்தயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே வீடு திரும்பினர்.”

ஒரு தந்தை தம் மக்கள் பண்பாட்டிலும், கல்வியிலும், பரிசு பாராட்டுகளிலும், எப்படிச் சிறந்து விளங்க வேண்டும் என்று எவ்வளவு ஆர்வம் கொள்கிறார் என்பதை அருமையாக விளக்கிக் காட்டுகிறது விளையாட்டுப் பந்தயம்!

இதிலே வரும் மற்றைப் பெயர்கள், நல்லம்மை, பொன்னம்மை, முத்தம்மை, இன்பவல்லி, நல்லதங்கை, பொன்முடி, தங்கமணி, தமிழ்க் கொடி, மயிலம்மை என்பன. வாயினிக்கச் சொல்லும் இப் பெயர்கள் வழக்கில் வரவேண்டும் என்னும் ஆர்வம் விளையாட்டுக் கதையிலும் மின்னலிடுகின்றது!

'பிழையின்றிப் பேசுக' என்னும் நூல் தமிழரசி கூறுவதாக அமைந்தது. 'ஒருநாள் காலையில் என் அருமைத் தந்தையார் என்னை அழைத்து அம்மா! தமிழரசி! உன் தங்கை வயிரமணி படுக்கையில் இருந்து எழுந்துவிட்டாளா?" என்று கேட்டார்கள்.

CC

அப்பா! படுக்கையில் முழிச்சிக்கொண்டு படுத்திருக் கின்றாள்" என்றேன். “அம்மா! முழிச்சிக்கொண்டு என்பது பிழையான சொல். விழித்துக்கொண்டு என்பதே திருத்தமான