உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10. சென்னையில் முகவர்

(மாடத்திற்கு எழில், ஓவியம்; மாநகருக்குச்சீர், கோபுரம்; நூலுக்கு நயம், முன்னுரை; இவற்றைப் போல் நிறுவனத்திற்கு வளம், முகவர்.)

ஒரு

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நெல்லையில் கால்கொண்ட நாளிலேயே சென்னையிலும் ஒரு கிளையைத் தோற்றுவித்தது. அத் தோற்றம், தமிழகத்தின் தென்னெல்லை வடவெல்லைகளை ஒருங்கிணைத்துப், பறவைக்கு அமைந்த இரு சிறகுகள் என எழுச்சிகொண்டு உயர்ந்தோங்க வகையாயிற்று. தமிழகச் சமுதாய ஒப்புதற்கு ஏற்பத் தென்பால் நெல்லையில் இருந்துகொண்டு செய்தலை மூத்தவர் அரங்கர் மேற்கொண்டார்; வடபால் சென்னையில் இருந்து வளர்பணி புரிதலை இளையவர் வ. சு. மேற்கொண்டார். மூத்தவர் பொறுப்போ, கழகத்தின் மேலாண்மைக் கடன் புரியும் அமைச்சர் பொறுப்பு; இளையவர் பதவியோ, முகவர் என்பது

ஏனை வணிகங்களுக்கும் நூல் வணிகத்திற்கும் உள்ள வேறுபாடுகளை முன்னர்க் கண்டோம். ஆங்குச் சுட்டப்பெறாத ஒருவேறுபாடு இவண் நோக்கத்தக்கது. பொருளான் ஆம் ஏனை வணிகங்கள். ஆனால் நூல்வெளியீட்டு வணிகம் பொருளான் ஆம் என்ற அளவில் அமைவது இல்லை. நூல் வணிகம் என்பது என்ன? வணிகமா? அச்சுத் தொழிலா? கட்ட வேலையா? அலுவலக ஆட்சியா? ஆய்வுக் களப்பணியா? பரப்பவை மன்றச் செயலா? எல்லாம் கூடிய ஒன்றே நூல் வணிகப்பணி!

6

ஒருவர் இன்று ஒரு வாணிகம், தொடங்கினாராயின். தொடங்கிய நொடிமுதலே பெட்டிக்குச் காசு வந்து கொண்டிருக்கும்; கற்றை கற்றையாய்ப்பணம் வெளியேறிப் பண்டமாக வந்திறங்கிக் கொண்டிருக்கும். அவர்கள் பொருள் களை உண்டாக்குவது இல்லை; உண்டாக்கி வைத்திருப்பவர் அல்லது வாங்கி வைத்திருப்பவரிடம் வாங்கி விற்பது அவர்கள் வேலை. நூல் வாணிகப்பணி, நூல்களை உருவாக்கியே விற்கத்